பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 - - டாக்டர். எஸ். நவராஜ செல்லையா

சிவப்பனுக்கள் மண்ணிரலிலும்(Speen), ஹிமோகுளோபின் கல்லீரலில் (Liver) சேமித்துவைக்கப்படுகின்றன. இவையே புதிய செல்கள் பிறக்கவும் பயன்படு பொருளாகிவிடுகின்றன.

அதாவது எலும்புகளில் தோன்றுகிற சிவப்பணுக் களுக்கு கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்ற ஹீமோ குளோபின் சத்து பயன்படுத்தப்படுகின்றன.

சிவப்பணு குறைகிறபோது

சிவப்பணுக்கள் இரத்தத்தில் குறைகிறபோது, இரத்தச் சோகை (Anaemia) எனும் நோய் ஏற்படுகிறது. மலேரியா போன்ற நோய்களினால், சிகப்பணுக்கள் அதிகமாக அழிந்து படுகின்றன. அதன் காரணமாகவே, இரத்த சோகை உண்டாகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் இரத்த சோகை பாதிக்கிறது.

இரத்த சோகை ஏற்பட இன்னொரு காரணம் - இரும்புச் சத்து உடலில் குறைவது. இரும்புச் சத்துதான் ஹீமோ குளோபினை உருவாக்கும் பெருமையைப் பெற்றிருக்கிறது. கொஞ்சங் கொஞ்சமாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இந்த இரும்புச்சத்து உடலில் குறையக் குறைய, ஹீமோகுளோபின் சத்தின் உற்பத்தியும் குறையக் குறைய, இரத்தச் சோகை ஏற்படுகிறது. இதற்கு உதாரணமாக அல்சர் நோயைக் கூறலாம்.

பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில், அதிக இரத்தப் போக்கின் காரணமாக, இது போன்ற கடுமையான நிலை உண்டாகிறது. பெண்களின் தாய்மைக் காலத்திலும், அவர்கள் வயிற்றுள் வளரும் குழந்தைகளுக்கு இரும்புச் சத்தைக் கொடுத்து, தங்கள் தேகத்தில் அந்தச் சத்தை இழந்து போகிறபடியால், இந்த இரத்த சோகைக்கு ஆளாகி விடுகின்றனர். -