பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அதாவது, நோய்க்கிருமிகள் உடலுக்குள் நுழைந்த வுடன், இந்த வெள்ளையணுக்கள் இரத்தக் குழாய்களின் சுவர்களிலிருந்து வெளியேறி வந்து, வந்தக் கிருமிகளைத் தாக்கி அவற்றை உட்கொண்டு விடுகின்றன.

எவ்வாறு இந்த அணுக்கள் இப்படி செயல்படுகின்றன என்பதையும் பார்ப்போம்.

கிரேனுலோசைட்ஸ் வெள்ளை அணுக்கள், நோய்க் கிருமிகள் வந்து நுழைந்த உடனேயே, அவற்றைத் தாக்கித் தகர்த்து உண்டுவிடும். இந்த அணுக்கள் திடீரென்று இயங்கி இந்தப் பணியைப் புரிகின்றன.

வேகமாக இயங்கும் இந்த அணுக்களுக்கு மாறாக, லிம்போசைட்ஸ் வெள்ளையணுக்கள் வேலை செய்கின்றன; அதாவது, வரும் நோய்க்கிருமிகளுக்கு எதிராக மாற்றுச் சக்தியை உற்பத்தி செய்கின்ற இவ்வணுக்கள், மெதுவாகவே பணியாற்றுகின்றன.

நோய்க்கிருமிகளின் தாக்குதல்கள் ஏற்படுகிறபோது, வெள்ளையணுக்கள், தாங்கள் இருந்ததைவிட மூன்று அல்லது நான்கு மட்ங்கு அளவில் மிகுதியாகப் பெருகிக் கொள்கின்றன. அவ்வாறு பெருக்கிக் கொண்டு பெரும் படையுடன் போராடத் தொடங்கிவிடுகின்றன.

சில நேரங்களில், நாம் சீழ் (Pus) என்று அழைக்கப் படுவது, தாக்குதல்களில் இறந்து போன வெள்ளையணுக்கள் தாம்.

@ogg 2 600gg (Blood Clotting)

அவசியமான அணுக்கள்: இரத்தத் தட்டுக்கள் (Platelets) என்று இந்த அணுக்கள் அழைக்கப்படுகின்றன. இவைகளின் அளவு சிவப்பணுக்களின் ,, பாகமாகவே இருக்கின்றன.