பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 85

இரத்தத் தட்டுக்களின் உற்பத்தியிடமாக அமைந்திருப் பவை எலும்புச் சோற்றில் உள்ள மேகாகரியோசைட் (Megakaryocytes) எனும் பகுதியாகும். ஒரு துளி இரத்தத்தில் 15 மில்லியன் இரத்தத் தட்டுக்கள் இருக்கின்றன.

இந்த அணுக்களே இரத்தம் உறைவதற்கு இன்றியமை யாதனவாக அமைந்துள்ளன. எப்படி என்றால், உடலில் ஏதாவது ஒரு இடத்தில் காயம் பட்டதும், இவ்வணுக்கள் சிதைந்து போய், த்ரோம்போகைனாஸ் (Thrombokinase) என்னும் இரசாயனப் பொருளை வெளிப்படுத்தி விடுகின்றன.

எவ்வாறு இரத்தம் உறைகிறது?

இரத்தம் என்பது மிகவும் மதிப்பிற்குரிய திரவம் மட்டு மல்ல. இன்றியமையாத, இணையில்லாத, அற்புதமான திரவமும் ஆகும்.

இதனை எளிதாக இழந்து விடக்கூடாது என்பதற்காகத் தான், தடுத்து நிறுத்தக் கூடிய முக்கியமான வழிகளை உடலே மேற்கொண்டு காத்து வருகிறது.

காயம்பட்டு இரத்தம் வெளிப்படுகிறபோது, சுமார் 15 சதவிகிதம் அளவு வெளிப்பட்டுப் போனால், அதனால், உடல் எந்த விதமான பாதிப்புக்கும் ஆளாகிவிடாது. அதற்கு மேல் போனால், உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பொதுவான இரத்த ஒட்டப் பாதையிலிருந்து, உட் புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ இரத்தம் வெளியேறுவதைத் தான் இரத்த இழப்பு அல்லது இரத்த வெளிப்பாடு (Haemorrhage) என்று கூறுகின்றார்கள்.

இப்படிப்பட்ட இரத்த இழப்பானது சீராக, தொடர்ந்து வெளியேறினால் இரத்த சோகை (Anaemia) ஏற்படும்.