பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 7

உயிருள்ளவைகளின் குணாதிசயங்கள்

1. உயிருள்ளவைகளுக்கு வளர்ச்சி உண்டு. அவைகள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, இறந்து போகின்ற வளர்ச்சி, எழுச்சி, தளர்ச்சி, இறத்தல் போன்ற தன்மைகளைப் பெற்றிருக்கின்றன.

2. உயிருள்ளவைகளுக்கு உணர்ச்சிகள் உண்டு. அந்த உணர்ச்சிகள் தொடு உணர்ச்சி, ப்டு உணர்ச்சி போன்றவையாக விரிந்து நிற்கும். -

3. அத்தகைய உணர்வுகள் ஒரு உடலுறுப்புப் பாகத்திலிருந்து பிறிதொரு உறுப்புக்குப் போகின்றவாறு, உணர்வுகளைக் கடத்துகின்ற ஆற்றலையும் நெகிழ்ச்சித் தன்மையையும் பெற்றிருக்கின்றன.

4. உயிருள்ளவைகள் தங்கள் இனத்தைத் தொடர்ந்து வாழச் செய்யும் வகையில் இனப் பெருக்கம் என்கின்ற மங்காத பேற்றினைப் பெற்றிருக்கின்றன. வாழையடி வாழையாக - பரம்பரை பரம்பரையாக என்பது போல, உயிருள்ளவைகள் தங்கள் வழித் தோற்றங்களை உற்பத்தி யாக்குகின்ற வல்லமையைப் பெற்றிருக்கின்றன.

5. உயிருள்ளவைகளின் உள்ஸ்ரீப்புக்களில் சிதைதல், சீரடைதல் (Metabolism) என்ற பணி தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.

- 6. உருவம் மாறுபடும் தன்மையை உயிருள்ளவைகள்

பெற்றிருக்கின்றன.

7. உயிருள்ளவைகள் இடம் விட்டு இடம் போகின்ற நகருந்தன்மையைக் குணாதிசயமாகப் பெற்றிருக்கின்றன.

மேற்கூறியவற்றைக் கொண்டிராதவைகளை உயிரற்ற வைகள் என்று நாம் எளிதாகக் கூறிவிடலாம்.