பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 89

இதன் அமைப்பானது, கூம்புவடிவத்தின் அடிப்பாகம் மேலாகவும், மேல்நுனி (Apex) கீழாகவும், சற்ற இடதுபக்கம் சாய்வாகவும் காணப்படுவதாக அமைந்திருக்கிறது.

இதயத்தின் முன்பரப்பு மார்பின் நடு எலும்பையும்(ster.

mum), விலாக் குருத்தெலும்புகளையும் நோக்கியுள்ளது. பின்பரப்பு உணவுக் குழலை நோக்கியும், கீழ்ப் பரப்பு உதரவிதானத்தை (Diaphragm) நோக்கியும் அமைந்துள்ளன.

இதயத்தின் மேற் புறத்தில் இரத்தக் குழாய்களும், பின்னால் முதுகெலும்புத் தொடரும் உள்ளன. இதயமானது மார்புக் கூட்டினுள் இரு நுரையீரல்களுக்கிடையில் இதமான இடத்திலே, மிகவும் பத்திரமாகப் பாதுகாப்புடன் வைக்கப் பட்டிருக்கிறது. இதயத்தின் மேலுறைகள்

இதயத்தின் சுவரில் மூன்று உறைகள் உள்ளன. அவையே இதயத்தைப் பத்திரமாகப் பாதுகாத்து, பணியாற்ற உதவுகின்றன.

1. என்டோ கார்டியம் எனப்படும் உள்உறை.

2. மையோ கார்டியம் எனப்படும் நடு உறை.

3. எபிகார்டியம் எனப்படும் வெளி உறை.

பெரிகார்டியம் (Pericardium) எனப்படும்

படலப்பையே இதயம் முழுவதையும் மூடிக் கொண்டிருக்கிறது.

பெரிகார்டியத்திற்கும் எபிகார்டியத்திற்கும் (Epicardium) இடையிலுள்ள பிள்வுபோன்ற இடத்தில், பெரிய கார்டியக் குழிவு உள்ளது. அதனுள்ளே சீரளப் புளுய்ட் (Serous Fluid) என்னும் நிணநீர் இருந்து, இதயம் சுருங்கி விரிகிறபோது உரசல் இல்லாதபடி, செயல்பட உதவுகிறது.