பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

மற்றும் வருகிற வெளித்தாக்குதல்களிலிருந்தும் இதயத்தைப் பாதுகாக்கிறது.

இரத்தக் குழாய்கள்

தேகத்தில் உள்ள இரத்தக் குழாய்களை (நாளங்கள்) மூன்று வகையாகப் பிரித்துக் கூறுவார்கள். அவை தமணிகள் (Arteries) go go air (Capillaries) & Gogg, air (Veins) என்ப்படும்.

scoastfesoi (Arteries)

தமணிகள் இருதயத்திலிருந்து உறுப்புகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களாகும். அவைகள் 3 உறைகள் கொண்ட (நடு, வெளி, உள்உறை) தடித்த சுவர்களுடன் அமையப் பெற்றிருக்கின்றன.

இரத்தத்தைக் கொண்டு தருவதற்காக, ஒவ்வொரு உறுப்புக்களின் உள்ளேயும் தமணிகள், சிறுசிறு கிளைகளாகப் பிரிந்து கொள்கின்றன. இந்த மிகச் சிறிய கிளைகளை நுண் தமணி என்பார்கள்.

இந்த நுண் தமணிகளின் மிகச்சிறிய பிரிவுகளே தந்துகிகள் என்று அழைக்கப்படுகின்றன.

g/st6i (Capillaies)

கண்ணுக்குப் புலனாகாத மிக நுண்ணிய வடிவமைப்புக் கொண்ட நுண் குழாய்களே, தந்துகிகள் ஆகின்றன.

தமணிகளின் உட்புற அளவு, இருதயத்திலிருந்து தூரமாகப் போகிறபோது குறைந்து கொண்டே வரும். ஆனால் தந்துகிகளின் உட்புற அளவு மாறுபடுவதேயில்லை.