பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 91

உடல் முழுவதும் பரந்து கிடக்கும் தந்துகிகளின் மொத்த உட்துவாரம், மகாதமணியைப் போன்று 500 மடங்கு இருக்கும் என்று கூறுகின்றார்கள்.

இரத்தமானது எல்லா திசுக்களுக்கும் போய்ச் சேர்கிறது என்பதை நாம் அறிவோம். இரத்தமானது உயிர்க்காற்றையும் உணவுப் பொருட்களையும் எடுத்துச் சென்று வழங்குகிறது என்பதையும் நாம் அறிவோம். -

இரத்தத்திற்கும் திசுக்களுக்கும் இடையிலான இந்தப் பண்டப் பரிமாற்றம், தந்துகிச் சுவர்கள் மூலமாகவே நடைபெறுகிறது. ஆக்சிஜன், உணவுச் சத்துக்களைத் திசுக்களுக்குக் கொடுத்து, அங்கே உண்டாகியிருக்கும் கழிவுப் பொருட்களை எடுத்து இரத்தம் செய்யும் பணிகள், இந்தத் தந்துகிகளின் மூலமாகவே நடைபெறுவதால், இதன் பங்கு மிக முக்கியமானதாகும்.

ஆகவே, தந்துகி வழியாகச் செல்லும் போது, தமனி இரத்தமானது சிரை இரத்தமாக மாறி, சிரைகளுக்குள் செல்கிறது.

&Doogir (Veins)

உறுப்புக்களிலிருந்து இருதயத்தை நோக்கி, இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களுக்கு சிரைகள் என்று பெயர்.

தமணிகளைப் போலவே, சிரைகளுக்கும் 3 உறைகள் உள்ளன.

தமணிகளைப் போல் அல்லாமல், சிரைகளுக்கு வால்வுகள் (தடுப்புகள் (Valves) உண்டு. அந்த வால்வுகள், இரத்தம் ஒடுகிற திசை நோக்கியே திறக்கின்ற இயல்பு கொண்டவையாகும். இதனால் என்ன பயனென்றால், சிரைகளிலுள்ள இரத்தம், இருதயத்தை நோக்கியே செல்லும். வேறு வழியே இல்லை.