பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

9

2

சிரைகளின் மிகச் சிறிய, நுண்ணிய பகுதி நுண் சிரைகள் (Wenules) என்று அழைக்கப்படும்.

இனிமேல், இதயம், இந்தக் குழாய்களை அடிப்படை யாகக் கொண்டு, எப்படி செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

இதயத்தின் செயலமைப்பு (Action)

மனித இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. இதய நடுச்சுவர் (Septum) ஒன்றால், இதயம் வலது அறை, இடது அறை என்ற இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. -

இந்த இரண்டு பாதிக்கும் இடையே எந்த விதமான தொடர்பும் கிடையாது.

இந்த இரு அறைகளும், இரத்தத்தை மேலேற்றும் (Double Pump) பம்புகளாக வேலை செய்கின்றன.

வலது அறையானது தூய்மையற்ற இரத்தத்தை (impure blood) உடலின் எல்லா பாகங்களிலிருந்தும் பெற்றுக் கொண்டு, அதை நுரையீரலுக்கு அனுப்பி வைக்கிறது. தூய்மையற்ற இரத்தத்தை (Venous blood) என்றும் அழைப்பார்கள். - -

இடது அறையானது, நுரையீரல்களிலிருந்து பிரான வாயு பெற்ற தூய இரத்தத்தைப் பெற்று, உடலில் உள்ள உறுப்புக்கள் அனைத்துக்கும் அனுப்பி வைக்கிறது.

இவ்வாறு உடலில் உள்ளதுய இரத்தமும், தூய்மையற்ற இரத்தமும் இதயத்திற்குள்ளாகத் தான் செல்கிறது என்றாலும், இந்த இரண்டு வகை இரத்தமும் எப்பொழுதும் கலந்து கொள்வதில்லை. இப்படிக் கலந்து விடாமல் தான், தனியான நடுச் சுவர் ஒன்று தடுத்துக் காக்கிறது.