பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 93

இரண்டு பாதியாக பிரிந்து இதயத்தின், ஒவ்வொரு பாதியும், மேலும் இரண்டு பாதியாகப் பிரிக்கப்

பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பாதியிலும் பிரிக்கப்பட்ட மேல் பாகத்தை எட்ரியம் அல்லது ஆரிக்கிள் (Atrium or Auricle) என்றும் அழைப்பர். இதை நாம் ஊற்றறை என்றும் கூறலாம்.

ஒவ்வொரு பாதியின் பிரிக்கப்பட்ட கீழ் பாகத்தை வென்டிரிக்கிள் என்பார்கள். அதை நாம் ஏற்றறை என்று கூறலாம்.

இரத்தமானது, மேல்பாகத்திலுள்ள இரண்டு அறைக்கும் நுழைகிறபோது, இரண்டும் ஒரே சமயத்தில் இயங்கி, இரத்தத்தை அதனதன் கீழ்பாக வென்டிரிக்கிள் அறைக்குள் அனுப்புகின்றன. அதனைப் பெற்ற வென்டிரிக்கிள் இரண்டும், உடனே இயங்கி இரத்தத்தைக் குழாய்கள் வழியாக வெளியே அனுப்பி வைக்கின்றன.

குறிப்பு: இடது வெண்டிரிக்கிளின் சுவர், வலது வென்டிரிக்கிளின் சுவரைவிட மூன்று மடங்கு கனமுடைய தாக, பருமனாக அமைந்திருக்கிறது. அதற்குக் காரணமும் இருக்கிறது.

வலது பக்கம், நுரையீரல் இரத்த ஓட்டத்திற்கு இரத்தத்தை அனுப்புவதால், அதற்கு சிறிது அழுத்தம் (Pressure) போதுமானது. ஆனால், இடது பக்கமானது, பொது இரத்த ஓட்டத்தின் மூலம், உடலின் எல்லா பாகங்களுக்கும் இரத்தத்தை அனுப்ப வேண்டியிருப்பதால், அதிக அழுத்தம் தேவையாக இருக்கிறது. அதற்காகவே, பருமனாக அமைக்கப்பட்டிருக்கிறது.

(இந்த இரு இரத்த ஒட்டமும் பின் பகுதியில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது.)