பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இதயத்தில் உள்ள தடுப்புகள் (வால்வுகள்)

ஒரே திசை நோக்கி, இரத்தம் ஒடிக் கொண்டிருப்பதால், மீண்டும் வந்தப் பக்கமே இரத்தம் போகாத வண்ணம் தடுத்து விடுகின்ற அமைப்புக்கே வால்வு (Valve) என்று பெயர். அதனை நாம் வழித்தடுப்பு அல்லது தடுக்கிதழ்கள் என்று தமிழில் கூறலாம்.

வால்வு என்றால் என்ன என்பதை சற்றுத் தெரிந்து கொள்வோம். - -

ஏட்ரியத்திற்கும் வெண்டிரிக்களுக்கும் இடையிலுள்ள துவாரங்களிலும், மகாதமணி, நுரையீரல் தமணியில் உருவாகும் துவாரங்களிலும் காணப்படுகிற எண்டோகார்டிய மடிப்புகளையே வால்வு என்று கூறுகிறோம்.

இனி, இதயத்திலுள்ள வால்வுகளைப் பார்ப்போம். (இதயத்தின் படம் தனியாகத் தரப்பட்டிருக்கிறது) 1. Glog QuGG58Faog (Superior Vena cave)

கீழ்ப் பெருஞ்சிரை qmssr (Inferior Vena cave) 2. [5]Juu @J8;cir (Pulmonary Venis)

3. மகாதமணி(Aorta) 4. நுரையீரல் தமணி (Pulmonary Artery) 5. வலது ஏட்ரியத்திற்கும் வலது வென்டிரிக்களுக்கும்

இடையே உள்ள வால்வு.

6. இடது ஏட்ரியத்திற்கும் இடது வென்டிரிக்களுக்கும்

இடையே உள்ள வால்வு.

இதயமானது ஒரே வழியில் இரத்தத்தை ஒடவிட்டுக் கொண்டிருப்பதால், ஆங்காங்கே வால்வுகள் அமைக்கப் பட்டிருக்கின்றன.