பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

藝 தமிழகத்துமக்களால் படிக்காத மேதை என்று புகழப்பட்ட காமராஜர் உலகமாம் பல்கலைக்கழகத்தில் கற்ற அனுபவக் கல்வி ஏராளம் ஏராளம் இவர் சின்னஞ்சிறு வயதிலேயே தன்னை தேச விடுதலை இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டவர். இந்தியாவின் முடிகுடா மன்னராம் நேரு பெருமகனாரின் "இதயம் கவர் கள்வன் காமராஜ் என்பது બ્રહ உண்ம்ை முதியோர் பதவிவிலகி இளையோர்க்கு வழிவிடவேண்டும் என்ற இவரது காமராஜ்திட்டத்தை உலகமேவியந்துபாாட்டியது.தம்அயராஉழைப்பால் பிரதமரையே தேர்ந்தெடுக்கும் உயர் தகுதி பெற்று கிங் மேக்கர் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவராய் விளங்கிய இவர் அனைவராலும் பார்ாட்டப்பட்டார். தமிழகத்தின் முதலமைச்சராய் இருந்த காலத்தில் وانات தொட்டி எல்லாம் பள்ளிகள் ஏற்படுத்தி ஏழைகளின் கல்விக் கண்ணை அகலத்திறந்தார்.பசித்தால் படிப்பு மனதில் தங்காதுஎன்பதைப் புரிந்து மதிய உணவுத் திட்டம் ஏற்படுத்தி ஏழைப்பிள்ளைகளின் பசியாற்றிய வள்ளலாம்: ജൂഖ്, பெருந்தலைவர் , என்று தமிழக மக்களாலும், கருப்புக்காந்தி என்றுவடமாநில க்களாலும்போற்றப்படும் பெருமைக்குரியவர்தாம் தலைவர்காமராஜ். என். வி. கலைமணி அவர்கள் மலேசியா நாட்டில் பினாங்கு நகரில் பிறந்தவர். சுமார் ஐம்பது ஆண்டுகள் பத்திரிகை துறைகளில் பணி புரிந்தவர். காமராஜரின் வாழ்க்கையை மிக அழகாக தொகுத்துள்ளார்.