பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தேசிய இலக்கியம் "செழுந்தரளப் பொன்னிசூழ் திருகன்னி பள்ளியுள்ளோர் தொழுது திங்கட் கொழுந்தணியுஞ் சடையாரை எங்கள்பதி வினிற்கும்பிட் டருன அங்கே எழுந்தருள வேண்டுமென இசைக்தருளி ............செல்வார்’ என்று பாடுகிறார். வெறும் சரித அறிவு ஒன்றுமட்டும் கொண்டு பாடுவதாயின் பல ஊர்களில் ஒன்றாகத் திருநனி பள்ளி சென்றார் என்று மட்டும் கூறி இருப்பார். சேக்கிழாரின் கலைத்திறனே இவ்வாறு பாடச் செய்கிறது. இதுகாறும் கூறியவற்றிலிருந்து சேக்கிழார் சரிதம், சரித் திரம் இவை இரண்டின் ஒற்றுமை வேற்றுமைகளை நன்கு அறிந்தவரென்றும், இவை இரண்டிலும் உள்ள சிறப்பியல்பு களை எடுத்துக்கொண்டுள்ளார் என்றும், அவற்றுடன் தமது கலையறிவையும் கொண்டு சிறந்த ஒரு சரிதக் காப்பியம் செய்தார் என்றும் நன்கு அறியலாம்.

10. காப்பிய அமைதி

திருத்தொண்டர் புராணம் ஒரு காப்பியந்தான் என்ற முடிவை இன்று பலரும் ஒப்புக்கொள்ளுகின்றனர். காப் பியத்திற்குள்ள சில இலக்கணங்கள் இதனிடை இல்லை என்பது உண்மையே. ஆனால், அவ்விலக்கணங்கள் முக்கியமானவை அல்ல. திறனாய்வாளர் கருத்திற்கு இசையப் பார்த்தால் இஃது ஒரு காப்பியந்த்ான் என்று கூசாமல் கூறலாம் ஆனால், தமிழ்மொழியில் காப்பியம் —f இதனை முதலில் கூறியவர் எந்தையா திருவாளர் பெருஞ்சொல் விளக்கனார் அ.மு. சரவண முதலியாரவர்கள்