பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 98 பொதுத் தன்மைக்கு ஏற்பதே உள்ள இவருடைய வருணனை கள் அறிந்து மகிழ்தற்குரியன. இதனால், வருணனைச் சுவை யும் குறையவில்லை. காவிரியைப்பற்றிக் கூறவந்த ஆசிரியர், "அண்ணல் பாகத்தை ஆளுடை நாயகி, உள்நெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது (இறைவியின் கருணை போன்று விடாமல் ஒழுகுவது காவிரி) என்றும், வம்புல மலர் நீரால் வழிபட்டுச் செம்பொன்வார் கரை எண்ணில் சிவாலயத் தெம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம்பொன்னி, உம்பர் நாயகர்க் கன்பரும் ஒக்குமால்' (தன் கரைகளிலுள்ள பல சிவாலயங்களை விடாமல் தன் நீராலும், அதில் வரும் பூக்களாலும் வழிபடுதலின் காவிரியும் சிவனடியாராகும்) என்றும் பாடுகிறார். ஆறு, பூக்கள் தாங்கி வருதலைக் கூறுதல் மரபுதான். காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி என்றுதான் இளங்கோவும் பாடுகிறார். அடியார்கள் வரலாறு கூறும் காப்பியம் என்பதைச் சேக்கிழார் தெள்ளத் தெளிய எடுத்தோதுகிறார் கீழ்வரும் பாடல்களில்: ".......................அரனுக்கு அன்பர் ஆலின சிங்தை போல அலர்ந்தன கதிர்கள் எல்லாம்" "பத்தியின் பால ராகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர் தத்தமில் கூடினர்கள் தலையினால் வணங்கு மாபோல் மொய்த்தள்ே பத்தியின்பால் முதிர்தலை வணங்கி மற்றை வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி எல்லாம்" - (பெ.பு.-திருநாட்டுச் சிறப்பு 21,22). முற்றி விளைந்த பயிர்களுக்குச் சேக்கிழார் காட்டும் இவ்வுவமையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது தேவர் சிந்தாமணியில் தரும் உவமை. 'கல்வி சேர்மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே என்ற தேவருடைய பாடல் சிந்தாமணி நூலுக்கு ஏற்றதேயாகும். கல்வியால் பெரிய வர்கள் சிறந்த அடக்கம் உடையவர்களாக வாழ்வார்கள் என்பது யாவரும் அறிந்த ஒன்று. கல்வியால் பெரியவர் கள் தம் புகழைப் பிறர் பேசக் கேட்டால் நாணத்தால்