பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 95 பெரும் பொருளாளராக ஆதல் இயலாத காரியம். அவர்களைப் பொறுத்தவரையில், முடிபு நலமாயின் வழியைப்பற்றிக் கவலைகொள்ள வேண்டா என்பதே கொள்கை. இத்தகைய ஒரு மரபில் காரைக்கால் அம்மையார் தோன்றுகிறார். அவருடைய வாழ்க்கைக்கும் அவர் பிறந்த மரபுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. ஆனால், அம்மையார் பிறந்தது உண்மை. உடனே சேக்கிழார் அதற்குக் கார ண ம் கற்பிப்பார்போலப் பாடுகிகிார். காரைக்கால் வணிகர் ஒரு தனிப்பட்ட இனம் என்பது போலப் பாடுகிறார். "மாணமிகு தர்மத்தின் வழிகின்று வாய்மையினில் ஊனமில்சீர்ப் பெருவணிகர் குடிதுவன்றி ஓங்குபதி” (பெ. பு-காாைக்காலம்மை; 1) மானத்தோடு கூடிய அறத்தின்வழி நின்று வாய்மையை யும். விடாது காக்கின்ற வணிகர்கள் வாழும் ஊர் என்று கூறுகின்றார். இவ்வாறு கூறுவதால் வணிகர் குலமாயினும் காரைக்கால் அம்மையார் தோன்றத் தகுந்த சூழ்நிலை அங்கே இருந்தது என்பதைத்தான் குறிப்பாக அமைக்கிறார். தமிழ்நாட்டில் எத்தனையோ நல்ல ஊர்கள் உண்டு. அவை அனைத்திலும் செம்மை சான்ற ஒழுக்கமுடைய அந்தணர்கள் வாழ்ந்திருக்கலாம். பின்னர் ஞானசம்பந்தர் ஏன் சீர்காழியுள் பிறக்கவேண்டும்? இவ் வினாவை உட் கொண்டவர்போலச் சூழ்நிலை அமைக்கிறார் ஆசிரியர். "அப்பதிதான் அந்தணர்தம் கிடைகள் மறைமுறையே செப்பும்ஒலி வளர்பூகச் செழுஞ்சோலை புறஞ்சூழ' (பெ. பு-ஞானசம்பந்தர்: 8) (ஆந்தணர் மறைஒலி சோலைகளிலும் சூழ்ந்துநின்றது) அவ்வூர் இருந்தது என்றும்,