பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 தேசிய ഉഷിച് உளங்கொன் மறை வேதியர்தம் ஓமது மத்திறம் கிளர்ந்ததிரு நீற்றொளியிற் கெழுமியகண் பகலும்' (இரவில் ஒமப் புகையும் பகலில் திருநீற்றொளியும்) அங்குச் சூழ்ந்திருந்தன என்றும் கூறுகின்றார். இத்தகைய வருணனை ஏனைய ஆசிரியரும் பாடக் கூடியதே. ஆனால், மக்கள் இந் நிலையில் வாழ்வதும் இயற்கையும்கூட இத்தகைய வாழ்விற்கு ஒத்திருந்தது என்று கூறுகையில் சேக்கிழார் ஒப்பற்ற காப்பியப் புலவர் ஆகிறார். நிலை திணைப் பொருள்களும் சீர்காழியில் வேள்வி செய்தனவாம். பரந்தவினை வயற்செய்ய பங்கயமனம் பொங்குனரியில் வரம்பில்வளர் தேமாவின் கனிகிழித்தமது கறுநெய் கிரந்தரம் ன்ேஇலைக்கடையால் ஒழுகுதலால் கெடிதம் மரங்களும் ஆகுதித் தகையவென மணத்துளதால்' (பெ. பு-திருஞானசம்பந்தர்; 7) என்று இவ்வாறு அவருடைய கற்பனை ஊற்றெடுக்கிறது. (வயலின் ஒரத்தில், வரப்பில் மா பருத்து நிற்கின்றது. இந்த மாங்கனியின் சாறு மாவிலை வழியாகக் கீழே வழிகின்றதாம். வழிந்த சாறு வயலில் முளைத்துள்ள தாமரையின் விரிந்த மலர்மேல் விழுதல், மரங்கள் யாகஞ் செய்வதுபோல உளதாம். தாமரை நெருப்பாகவும் மாம்பழச்சாறு நெய்யாகவும் உருவகஞ் செய்யப் பெறுகிறது.) பூமாண்ட தீக்தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து தேமாங் கனிசி தறிவாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங்கதம்.................." - (சிந்தாமணி, 81) என்ற முறையில் வருணனை கூறிய திருத்தக்க தேவர். கவிதையும் இதுவும் ஒப்புநோக்கற்குரியன. வேத வேள்வியை நிலைநாட்ட வருகிறார் ஒருவர். அவர் பிறந்த