பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 97 நாட்டிற்கு வருணனை கூற வேண்டுமாயின் இதைவிடச் சிறந்த முறையில் கூற இயலாதன்றோ? இம்மட்டோடு. விடவில்லை ஆசிரியர். நிலைத்திணைப் பொருள்களாகிய மரங்களைக் கூறினார் . இயங்குதினைப் பொருள்களில், மக்களைப்பற்றிக் கூறியதை முன்னர்க் கண்டோம். இத் திண்ையில் சிறிது மக்களைவிடத் தாழ்ந்த வண்டைப்பற்றிச் கூறுகிறார். 'காமர்திருப் பதியதன்கண் வேதியர்போல் கடிகமழும் தாமரையும் புல்லிதழும் தயங்கியநூ லுக்தாங்கித் - துமருநுண் துகள்அணிந்து துளிவருகண் ணிர்ததும்பித் தேமருமென் சுரும்பிசையால் செழுஞ்சாமம் பாடுமால்" . . (பெ.பு -திருஞான சம்பந்தர், 9) என்கிறார். வண்டுகள் மகரந்தமாகிய நீற்றை அணிந்து சாமகீதம் இசைக்கின்றனவாம். மரம், வண்டு, மக்கள் மூவரும் இந்நிலை பெற்று வாழ்ந்தமையால் ஞானசம்பந்தர் பிறக்க அவ்வூர் ஏற்ற நிலமாக இருந்தது போலும். இங்ங்னம் கற்பனை செய்து பாடி விடலாம். ஆனால், அக் கற்பனை அறிவுக்கும் அநுபவத்திற்கும் பொருத்தம் உடையதாக அமைதல் வேண்டும். கவிதையின் இயல்பறிந்தார் யாரும் இப் பாடல்களைக் குறை கூறல் இயலாது ஏனைய புலவர்கள் வருணனை இவ்வாறு பொருள் பொதிந்த கற்பனையாக இராது. கற்பனை என்ற அளவில் அவற்றை அனுபவிக் கலாம். ஆனால் பின்னர் நிகழவிருக்கும் சரித்திரத்திற்கும் கற்பனைக்கும் யாதொரு தொடர்பும் இராது. வருணனை என்றவுடன் தம்மை மறந்து கற்பனையில் இறங்கி விடுதல் கவிஞர்களுக்கு இயல்பு. சில சமயங்களில் இவ்வருணனை முன்னுக்குப்பின் முரணாகவும் நிற்கும். கவிச்சக்கரவர்த்தி கம்பனே இப்பிழைக்கு இலக்கு ஆகிவிடுகிறான். கோசல நாட்டைப்பற்றிய வருணனை அவனால் பேசப்பெறுகிறது. கற்பனை வருணனை என்று எடுத்துக்கொண்டால் இவை மிகச் சிறந்தவைதாம். "எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே. இல்லாருமில்லை உடையார்களு தேசி.-7