பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 99 ஒரு காப்பியப் புலவன் வருணனையில் புகுவதனால் இரண்டு வித வன்மைகள் அவன்பால் வேண்டும். ஒன்று, அவன் கற்பனையுடன் கலந்து வருணனை செய்யும் பகுதி: ஏனையது, அவன் காணும் காட்சியை உள்ளவாறே வருணிப்பதாகும். இவ்விரண்டாவது வருணனையில்தான் கவிஞனுடைய கூர்த்த அறிவும் அநுபவமும் தெளிவாகப் புலனாகும். நாம் காணும் காட்சியைத்தான் கவிஞனும் காணுகிறான். ஆனால், நாம் கண்டும் காணாதவற்றை அவன் கண்டு விடுகிறான். இங்ங்னம் அவன் காணும் காட்சிகள் பல அவற்றுள் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு ஏனையவற்றைத் தள்ள நேரிடும் எவற்றை எடுப்பது, எவற்றைத் தள்ளுவது என்பதிலும் அவனுடைய வன்மையை நாம் அறிதல் கூடும். சில கவிஞர் உயர்ந்த மக்கள் வாழும் இடத்தை நன்கு அறிந்திருப்பர். அவர்கள் வாழ்க்கையை நன்கு அறிந்து, அவர்களுடன் மிகுதியும் பழகி இருப்பர். ஆதலின் அப்பகுதிகள் - வரும்பொழுது நன்கு கூறிவிடுவர். ஆனால், எளிய மக்கள் வாழ்க்கை யைக் கூறுகையில் இடறிவிழுவர். இதற்கு நேர் முரணான நிலையும் உண்டு. சில கவிஞர்களே எல்லாவற்றையும் நன்கு கண்டு பாடக்கூடியவர். ஆனால், இத்தகையோர் கட்குங்கூட ஒர் இடர்ப்பாடு நேர்வதுண்டு ள்ளிய மக்கள் வாழ்க்கை, சூழ்நிலை இவற்றைப் பாடும்பொழுது வருணனை முதலியவற்றிற்கு என்ன பொருள் அங்குளது என்று அறியாமல் தவிப்பர். அரண்மனையையும், கோவிலையும் கண்ட கண்களுக்குச் சேரியைக் கண்டால் அங்கு ஒன்றும் இல்லாதது போலவே தோன்றும். ஒரோவழி இருப்பது தெரியினும் அதனை உள்ளவாறே பாட மனம் வருவதில்லை. எனவே, குடிசை கோபுரமாகவும் சாக்கடை தீர்த்தமாகவும் காட்சியளிக்கும். இங்ங்னம் எல்லாம் இல்லாமல் சேக்கிழார் கோப்பியம் அமைக்கிறார். புகழ்ச்சோழர் தலைநகராகிய உறையூரையும், காஞ்சியையும் வருணித்த அதே கவிஞர், நந்தனார் சேரியையும் வருணிக்கிறார். -