பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தேசீய இலக்கியம் தக்கார் சேக்கிழார் என்பதும். அவருடைய நூலில் காப்பிய அமைதி நிறைந்து காணப்பெறுகிறது என்பதும் மறுக்க ஒண்ணா உண்மைகளாம்.

11. சேக்கிழாரும் அரசரும்

சோழப் பேரரசின் முதல் அமைச்சராக இருந்த சேக்கிழார் தாம் இயற்றிய காப்பியத்தில் அரசர்களைப் பற்றிக் கூற நேர்ந்தால் எவ்வளவு சிறப்புடன் கூறி இருப்பார் என்று எதிர்ப்பார்ப்போம்? ஆனாலும், அவர் கூறவந்த அரசர்கள் கேவலம் உலகியலில் மட்டும் பேரரசர் என்று மதிக்கத்தக்கவர் அல்லர். இருவேறு உலகத்து இயற்கையையும் தம்முள் முரண்படாமல் ஒருசேரக் கொண்ட அரசர்கள் அவர்கள். அவர்கள் வரலாற்றைப் பாடவந்த கவிஞர், அவர்களுடைய மண்ணாள் செல்வத்தை அதிகம் மதித்ததாகத் தெரியவில்லை. அரசர் என்ற காரணத்தால் அவர்களுக்கு அதிக மதிப்புக் கொடுத்ததாகவும் தெரியவில்லை. என்றாலும், அரசன் என்பவன் முன்னை விணைப்பயனால் இச் செல்வம் எய்தினான் என்ற கருத்தையே சேக்கிழார் கொண்டுள்ளார். "திருவுடை மன்னர் இறைவனுடைய இன்னருளால் தோன்றியவர் எ ன்று ம், அவர்களையல்லாமல் இம் மண்ணுலகம் வாழ இயலாதென்றும் அவர் கருதினார் என்றே நினைக்க இடமுண்டாகிறது. மூர்த்தி நாயனார் வரலாற்றில் இக் குறிப்பு மிகத் தெளிவாகப் பேசப்பெறுகிறது. \ "தாழுஞ்செயல் இன்னொரு மன்னவன் தாங்க வேண்டும் கூழும்குடியும்முதல் ஆயின கொள்கைத் தேனும் குழும்படை மன்னவன் தோளினைக் காவல் இன்றி வாழும்தகைத்து அன்று.இந்த வையகம் என்று சொன்னார்"