பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தேசீய இல்க்கியம் வாய்ந்திருந்தது பல்லவகுலம். எனவே, தாம் நேரிற்கண்ட மன்னனும், அவன் முன்னோரும், அக் குலத்திற்கு முற்பட்ட பல்லவருள் தாம் அறிந்த பேரரசரும் ஆக அனைவருமே அருள் திருவும், அரசுத் திருவும் ஒருங்கே அமையப்பெற்றிருந் தமையைக் கண்ட சேக்கிழார், 'மன்னரை இன்றிவைகும் மண்ணுலகு எண்ணுங் காலை, இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்று பாடுவதில் வியப்பு ஒன்றும் இல்லை அன்றோ? தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மன்னனை எல்லா வன்மையும் உடையவனாகக் கருதுவது சங்ககாலந்தொட்டு வந்த வழக்கமாகும். யான் உயிர் என்பது அறிகை, வேல் மிகுதானை வேந்தர்க்குக் கடனே எனப் புறநானூறு கூறு கிறது மக்கட்கு இறையென்று வகைப்படும் எனக் குறள் கூறுதல் காண்க. "மன்பதை காக்குங் தென்புலம் காவல் என் முதற்பிழைத்தது’ எனச் சிலப்பதிகாரம் கூறுவதும், 'உறங்குமாயினும் மன்னவன் தண்ணளி, கறங்கு தெண் திரை வையகம் காக்குமால் எனச் சிந்தாமணி சிறப்பிப்பதும் இக் கருத்தை வலியுறுத்தும். எனவே, பன்னிரண்டாம் நூற்றாண்டில், சோழப் பேரரசு இறுமாந்திருந்த நிலையில் தோன்றிய சேக்கிழார். "மண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட் கெலாம், கண்ணும் ஆவியும் ஆம்பெரும் காவலன்' என்று கூறுதல் பொருத்தமுடையதே. அரசர்களை இவ்வளவு சிறப்பித்து அவர் பாடினதற்குரிய காரணத்தையும் அறியவேண்டும் நல்வினையின் பயனாக அரசராகப் பிறந்தனர் என்ற கொள்கையை உடையவரா யினும், அரசராக ஒருவர் பிறந்த காரணத்தால் அவரைத் தாம் மதிக்கவில்லை என்பதை நன்கு வெளிப்படுத்து கிறார். சிறுத்தொண்டர் என்ற அடியார் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். பல்லவச் சக்கரவர்த்திகளில் ஒருவ னாகிய நரசிம்மவர்மனிடம் சேனாதிபதியாக இருந்தவர் இவ்வடியார். அப்பொழுது அவருடைய பெயர் பரஞ் சோதியார் என்பதாகும். இப் பரஞ்சோதியாரே வாதாபி