பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 105 யின்மேல் படையெடுத்து இரண்டாம் புலிகேசியை வெற்றி கொண்டவர். இவரால் வெல்லப்பெற்ற புலிகேசி, வடநாட்டுப் பெருவேந்தனான ஹர்ஷ சக்கரவர்த்தியை வென்றவன் என்றால், பரஞ்சோதியாரின் பெருமையும் வீரச்சிறப்பும் கூறாமலே விளங்கும் சேனாபதியான இவர் வெற்றி பெற் றாலும், அரசனாகிய நரசிம்மவர்மனுக்குத்தானே அந்தப் பெருமையும் சிறப்பும் சென்று சேரும்? சரித்திரம் எழுதும் பொழுது இரண்டாம் புலிகேசியை வென்று வாதாபியைப் பொடியாக்கினவன் நரசிம்மவர்மன் என்றுதானே குறிக்கிறார் கள்? என்றாலும் என்ன? சேக்கிழாரைப் பொறுத்த்வரை, நரசிம்மவர்மன், இரண்டாம் புலிகேசி என்ற இவ்விருவருமே சாதாரண மனிதர்கள் ஆகிவிடுகின்றனர். இவர்கள் பெயரைக் கூடக் குறிப்பிட அவர் விரும்பவில்லை. இவர்கள் பெயர்களை அவர் அறியவில்லை என்று கூற இயலாது. ஏனெனில், பரஞ்சோதியார் வாதாபியின்மேல் படை கொண்டு சென்றதை முதன்முதலில் குறிப்பவர் அவர்தாம். "மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித் தொன்னகரம் துகளாகத் துளைகெடுங்கை வரையுகைத்துப் பன்மணியும் கிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்னனஎண் இலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்" (பெ பு-சிறுத்தொண்டர், 6) (தம்முடைய அரசனுக்காகப் படைகொண்டு சென்று வாதாபி நகரை அழித்து, யானை, குதிரை, பொன் ஆகிய வற்றை நிரல்படக் கொணர்ந்து தம் அரசன் முன் வைத்தார்.) இந்தப் பாடலின் அருங்குறிப்பு இல்லையானால் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் முதலிய நாயன்மார்களுடைய