பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் f : 3 பார்ப்பதற்கு எளிமையாகவும், பொருள் விளக்கமாகவும். உள்ள இப் பாடலிலே சேக்கிழாரின் கவித்திறம் பொங்கி. வழிவதைக் காணலாம். பேசுபவன் மதிநுட்பம் மிகவுடைய முதலமைச்சன். பேசப்படுபவன் உலகம் போற்றும் மனுநீதிச் சோழன். குற்ற்ம் இழைத்தவன் சோழனின் ஒரே புதல்வன். குற்றம் இழைக்கப்பெற்றது பசுங்கன்று. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசனின் மகன் செய்த குற்றத்தை அரச னிடமே எடுத்துக்கூற வேண்டிய இக்கட்டான நிலை அமைச்சனுக்கு ஏற்பட்டிருக்கிறது. எவ்வளவு அழகாகவும் சாமர்த்தியமாகவும் அமைச்சன் பேசுகிறான்! வளவ! என்று விளிக்கின்றான் மன்னனை. வளவ’ என்ற சொல்லுக்குச். சோழன் என்று பொருளானாலும், வளப்பமுடைய நாட்டின் தலைவனே என்பது இங்கே பொருளாகும். எனவே, நடைபெற்ற இச் சிறு நட்டத்தைப் பொருட் படுத்த வேண்டா என்பது குறிப்பு. அடுத்து யார் குற்றம் செய்தார் என்று அறிந்துகொள்ளத் துடிக்கும் மன்னனை நோக்கி நின் புதல்வன் என்று கூறுவதனால் ஒரளவு மன்னனின் கோபத்தைத் தணிக்க முற்படுகிறான். இதனை அடுத்து ஆங்கு என்ற சொல்லால் எங்கோ ஒரு தவறு நடந்துவிட்டதைக் குறிக்கிறான். மனித மனம் கண்ணெதிரே , கானும் கொடுமையில் ஈடுபடுவதுபோல வெகுதூரத்திற் கப்பால் நடந்த ஒன்றில் ஈடுபடுவதில்லை ஆங்கு என்ற சுட்டால் நடைபெற்ற நிகழ்ச்சியின் கொடுமையை மேலும் குறைக்க முற்படுகிறான் அமைச்சன். இனி மணிநெடுந் தேர் என்பது தொடங்கி போங்கால்? என்பதுவரை அரசகுமாரனைப்பற்றிய செய் த யா கும். "மணிகள் கட்டிய பெரிய தேரின்மேல் ஏறித்தேர்ப் படைகளும் யானைப் படைகளும் சுற்றிலும் சூழ்ந்துவர, அரசர்கள் உலாப் போவதற்கே உரிய தெருவில் போகும்பொழுது என்பதே ಐಸಿ பொருள். இதிலுள்ள ஒவ்வொரு சொல்லும் மிக்க