பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 117 "மாநிலம்கா வலன் ஆவான் மன்னுயிர்கர்க் கும்காலைத் தான்.அதனுக்கு இடையூறு தன்னால்தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால் ஆணபயம் ஐந்தும்தீர்த்து அறங்காப்பான் அல்லனோ,' (பெ.பு.--திருநகரம், 36). என்ற பாடலால் உயிர்கட்குத் தன்னாலும், தன் படையாலும், பகையாலும், கள்வராலும், ஏனைய விலங்கு முதலிய உயிர்களாலும் உண்டாம் தீங்கைத் தடுத்து நன்மை விளை விப்பவனே அரசன் என்ற கருத்துப் பேசப்படுகிறது. இவ்வாறு துயர் தீர்க்கவேண்டிய மன்னனாலேயே அல்லது அவன் மகனாலேயே உயிர்கட்குத் தீங்கு நேரிடின் அவனை - என்னென்று குறிப்பது? எனவே, அரசன், அமைச்சர்கள் கூறிய அறிவுரையை எடுத்துக்கொள்ளத் துணியவில்லை. அன்றியும் அவ்வாறு செய்தால் இரண்டு நஷ்டங்கள் ஏற்படும் என்று கூறுகிறான். முதலாவது, இப்பசுவின் வருத்தம் தீராது. இரண்டாவது, அறமும் நிலை புரண்டு விடும். எத்துணையளவு பிராயச்சித்தம் எனப்படும் கழுவாய் செய்யினும், அது ஒருவேளை அரசகுமாரன் பாவத்தைப் போக்கலாம்; ஆனால், 'குலக்கன்றை இழந்து அலறும் கோ உறுநோய் மருந்து ஆகுமோ? எனவே, பசுவின் துயரத்தைப் போக்காத எந்தக் கழுவாயும் பயன் அற்றதே. என்பது மன்னனுடைய வாதம். - அடுத்து அவன் கூறுவது அமைச்சர்கட்கும் அச்சத்தை விளைவிக்கிறது. என் மகன் செய்த பாதகத்துக்கு மட்டும் கழுவாய் தேடிவிட்டு, அந்நியன் ஓர் உயிர் கொன்றால் அவனைக்கொல்வேனானால் அறம் பிழைத்துவிடாதோ? என்று அரசன் பேசுகையில் யார்தான் மறுத்துக் கூற இட முண்டு அரசனுடைய மனம், நினைத்தற்கு அரிய வழியில் ச்ெல்வதை அறிந்த அமைச்சர்கள் மிகவும் அஞ்சிவிட்டனர். எவ்வாறாயினும் இதனைத் தடுக்கவேண்டும் என்ற ஒரே முடிவுடன் ஒரு வாதம் பேசத் தொடங்கிவிட்டனர். 'அரசே இது என்ன புதுமை மைந்தனை இதற்காகக் கொல்வதா?.