பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 1 19 தேன். ஆனால், அத்துன்பத்தைப் போக்க முடியவில்லை’ என்று கூறிவிடுதல் மட்டும் போதாது. பிற உயிர் படுத் துன்பத்தை எவ்வாற்றானும் போக்க முற்படல் வேண்டும்: அது இயலாது போமாயின் அவ்வுயிர் படுந் துன்பத்தைத் தானும் அனுபவிக்கவேண்டும் என்பதே இத்தமிழன் கண்ட அறமாகும். தனக்கு வந்த நோயை ஒருவன் போக்க இறுதிவரை போராடுகிறான் அன்றோ? இனி என் முயற்சி ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டு வாளா இருந்துவிடுதல் இல்லை அன்றோ? எனவே பிற உயிர்கட்கு வருந்துன்பக் தைப் போக்க இறுதிவரை போராடுதலும் அது இயலாத வழி அதனுடன் சேர்ந்து தானும் அத்துன்பத்தை அனுப வித்தலுமே தக்கதாகும். இந்த அறநெறியையே மனு வேந்தனும் மனத்துட்கொண்டு பின்வருமாறு பேசுகிறான்: 'எனமொழிந்து மற்று.இதனுக்கு இனிஇதுவே செயல் இவ்ஆன் மனம்அழியும் துயர்அகற்ற மாட்டாதேன் வருக்தும் இது தனதுறுபேர் இடர்யானும் தாங்குவதே தருமம்' என அனகன் அரும் பொருள்துணிந்தான் அமைச்சரும் அஞ்சினர் அகன்றார்." (பெ. பு-திருநகரம், 48) இப்பசுவின் துயரைப் போக்கவில்லையாயின், இது வருந்தும் துயரத்தை யானும் ஏற்று அனுபவிக்க வேண்டிய செயலைச் செய்தலே அறம் என்று துணிந்துவிட்டானாம் மன்னன். அவன் கருத்தறிந்த அமைச்சர்கள் அச்சத்துடன் அவ்விடம் விட்டு அகன்றார்கள். பசுவின் துயரத்தைப் போக்கவேண்டுமாயின் அதற்கு ஒரே வழிதான் உண்டு. அதாவது அப்பசுவின் கன்றை உயிர்ப்பித்து எழுப்பினால் ஒழியப் பசு மகிழ்ச்சி யடையாது. இறந்த கன்றை எழுப்புதல் என்பது மனித முயற்சிக்கு