பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் | 21 மருமம்தன் தேர்ஆழி உறஊர்ந்தான் மனுவேந்தன் அருமந்த அரசாட்சி அரிதேசமற்று எளிதோதான்" . (பெ.பு-திருநகரம், 44) தனக்கு மற்றொரு மகனும் இல்லை என்பதை மறந்து விட்டு, அறவழி செல்லும் கடமை ஒன்றையே பெரிதென மதித்த மனுவேந்தன் மகனுடைய மார்பில் தேரின் சக்கரம் ஏறும்படி அவனைக் கிடத்தித் தேரைச் செலுத்தினான். தமிழன் கண்ட அறம் எத்தகையது என்பதற்கு இதனினும் வேறு சான்று வேண்டுமோ? பிறிதின் நோய், தன்னோய்போலப் போற்றலும் இதுதானே. இயன்றவரை நோயைப் போக்க முயன்றான்; அது இயலாதவழி மனிதன் என்ன செய்கிறான்? நோயை ஏற்று அனுபவிக்கிறான் அன்றோ? அதையே மன்னனும் செய்து குறள்வழி வாழ்ந்து r அழியாப்புகழை எய்திவிட்டான்.


13. காப்பியத் தலைவர்

சேக்கிழார் பெரிய புராணத்தைப் பாடினார். ஆனால், அவருக்கு முதல் நூலாக இருந்தது நம்பி ஆரூரர் ஆகிய சுந்தரமூர்த்திகள் பாடிய 'திருத்தொண்டத்தொகை"யாகும். சுந்தரமூர்த்திகள் காலத்திலும் அவருக்கு முன்பும் இத் தமிழ்நாட்டில் பல் அடியார்கள் வாழ்ந்தனர். அவர்கள் வாழ்க்கையில் பல துறைகளில் ஈடுபட்டிருந்தாலும் அடிப் படையில் ஒரே குறிக்கோளுடையவர்களாக வாழ்ந்தனர். அவர்கள் கொண்டிருந்த இப்பொதுக் குறிக்கோள் காண மாகவே அவர்கள் அனைவரையும் அடியார்கள் என்ற