பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 - தேசிய இலக்கியம் பொதுத் தலைப்பில் நம்பியாரூரர் அடக்கிவிட்டார். உலகின் பல்வேறு பாகங்களிலும், எல்லாக் காலத்தும் பெரியோர்கள், அடியார்கள் வாழ்ந்தர்ர்கள், வாழ்வார்கள் என்பதை நம்பியாரூரர் அறியாதவர் அல்லர். எனவே அவர்கள் அனைவருக்கும் சேர்த்து அப்பாலும் அடி சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்” என்று கூறிவிட்டார். காலம் இடை இட்டவும், தேசம் இடை இட்டவும், ஆன நிலையில் வாழ்ந்தவர். வாழ்கின்றவர், வாழப்போகின்றவர் ஆகிய அனைவர்க்கும் அடியேன் என்று பரந்த மனப்பான்மையுடன் கூறிவிட்டார். - - ஆனால், திருத்தொண்டத்தொகை'யின் முற்பகுதியில் கூறப்பட்டவர்கள் அனைவருமே தமிழ்நாட்டில் வாழ்ந்த வர்கள்தாம். வேண்டுமென்றே தமிழ்நாட்டினரைத் தேர்ந் தெடுத்துச் சுந்தரமூர்த்திகள் கூறின அருமைப்பாட்டைச் சேக்கிழார் நன்கு அறிந்துகொண்டே பெரிய புராணம் பாடினார். ஆகலின் பெரிய புராணத்தைத் தேசீய இலக்கியம்: (National Literature) Ersörgy Systżssorih. @$ssosu GQ5 தேசீய இலக்கியம் பாடுவதற்குத் தமக்கு வாய்ப்பு அளித்தவர் சுந்தரர் என்பதைச் சேக்கிழார் மறவாமல் அவருக்குத் தனிப்பட்ட முறையில் சருக்கந்தோறும் நன்றியுடன் வணக்கம் செலுத்துகிறார். - தமிழ்நாட்டின் ஒரு பகுதியான திருமுனைப்பாடி நாடு ஒரு தனிச் சிறப்புடையது. எங்கும் நிறைந்த உருவமற்ற பரம்பொருள், வடிவுகொண்டு மண்மேல் நடந்து வந்த பெருமை, திருமுனைப்பாடி நாட்டிற்கே உண்டு; பெருகிய நலத்தால் மிக்க பெருந்திருநாடு (தடுத்தாட் கொண்ட புராணம், 2) என்று சேக்கிழார் அந்நாட்டை வருணிக்கிறார். 'பெருந்திருநாடு’ என்றால் செல்வத்தால் சிறந்த நாடு என்பதே பொருள். ஆனால், இந்த அடைமொழிகட்கும் அடையாகப் பெருகிய நலத்தால் மிக்க என்ற மேலும் ஓர் அடைமொழியை வேண்டுமென்றே சேக்கிழார் பெய்கிறார்,