பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தேசிய இலக்கியம் அழகற்றுப் போமாறு செய்தலையும் காண்கிறோம். அங்ங்னமே தவமும், செய்தவர் அனைவரிடமும் இருப்பினும் அனைவரிடத்தும் அது நல்ல முறையில் அமைந்திருக்கும் என்று கூறுவதற்கில்லை. இராவணனும் தவம் நிறையச் செய்திருந்தான்; எனினும், அத்தவம் அவனிடம் நன்கு பொருந்தி இருக்கவில்லை. இன்றேல் அவன் அவ்வளவு தவறான வழிகளில் சென்றிருக்க மாட்டான். திருநாவலூர் செய்த தவம் அதனிடம் நன்கு பொருந்தி இருந்ததா இல்லையா என்பதை ஆசிரியர் ஒரு சொல்லால் விளக்கு கிறார். 'மருவிய தவத்தால் மிக்க வளம்பதி என்னும் பொழுது அது விளங்குகிறது. மருவிய என்ற சொல்லுக்குப் பொருந்திய என்பதே பொருள். எனவே, பொருந்திய தவத்தையுடைய ஊர் என்பது பொருளாயிற்று. பொருந்திய தவம் என்றால் என்ன? தான் தங்கத்தக்க இடத்தைத் தேடிச் சென்ற தவம், இறுதியில் திருநாவலூரே தக்க இடம் என்று அறிந்து அங்கேயே பொருந்தி விட்டதாம். இத்துணைச் சிறப்புடைய ஊரில் ஒரு குடும்பம். அக் குடும்பத்திற்கே ஒரு சிறப்புண்டு, அவர்கள் பரம்பரையாகவே சிவபெருமானுக்குத் தொண்டு செய்யும்,-இல்லை-அடிமை செய்யும் இயல்புடையவர்கள். இத்தகைய பரம்பரையில் வந்த பெரியவர் சடையனார் என்ற ஆதி சைவர். அவருக்கு இசை ஞானியார் என்பவர் மனைவியாராக வாய்த்தார். இதனைக் கூற வந்த சேக்கிழார். "மாதொரு பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்கு ஏதம்இல் கற்பின்வாழ்க்கை மனை இசை ஞானியார்பால் தீதுஅகன்று உலகம் உய்யத் திருஅவதாரம் செய்தார்" (பெ.பு.-தடுத்தாள், 3) என்று கூறுகிறார்.