பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 தேசீய இலக்கியம் என்பவற்றுச்கும் அடிமையாவதைச் சீறுபவர்கள் இந்த நம்பிக்கை செய்யும் விந்தைஒேன்றை அறிவதில்லை. இந்த நம்பிக்கை என்பது பல்லாயிரம் ஆண்டுகளாகப் பலராலும், கைக்கொள்ளப்பட்டு, அநுபவமாகக் கண்ட உண்மைகள். எனவே, அவற்றிற்கு அடிமையாவதில் அதிகத்தவறு இருப்ப தில்லை. ஆனால், எதனையும் நம்ப மறுக்கும் இவர்கள் கூற்று இன்னும் காலம் என்னும் உலையில் பெய்யப்பட வில்லை. எனவே, காலத்தை வென்று வாழக்கூடிய தகுதி அவற்றில் உண்டா என்று தெரியுமுன்னரே, சில வார்த்தை கட்கு இவர்கள் ஏன் இப்படி அடிமையாகி விட்டார்கள் அந்தச் சொற்களை மந்திரம்போல் நம்பிக்கொண்டு தம் சொந்த அறிவை அடகு வைத்துவிடக் காரணம் யாதோ? அடிமை என்ற சொல்ல்ை வேரோடு களைய விரும்பி முயன்ற கவிஞர் பாரதியாருங்கூடப் பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் என்றுகூறி வாய்மூடு முன்னரே பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்' என்று கூறிச் சென்றார். பெருஞ்சுட்டு வேண்டுவார் எனவே, இறைவனுக்கு அடிமைத் தொழில் பூண்ட சடையனார் தம் அருமை மைந்தனுக்குத் தக்க பெயர் ஒன்றைத் தேடினார். பெயரில் என்ன இருக்கிறது என்று பலரும் கேட்டாலுங்கூடப் பெயரில் சில உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. பெரியவர்களுடைய பெயர் களை வைப்பதனால் குழந்தைகளும் இளமை தொட்டே அப் பெயர் உடைய பெரியவர்கள்போல் உயர்ந்த குறிக்கோளுடன் விளங்க வாய்ப்பு ஏற்படும் என்று நம்பினார்கள். பல சந்தர்ப்பங்களில் ஏதேனும் பெயர் கொண்டவர்கள் செயற்கரிய செயல்கள் செய்து பெரியார்களாக ஆகிவிட்டால் பிற்காலத்தார் அப்பெயர்களைப் போற்றி எடுத்துக் கொண்டனர். எனவே, சடையனார் தம் மகனுக்கு வைத்த பெயர் ஞானிகளும் வணங்கி ஏற்றுக்கொள்ளும் பெயராக அமைந்தது என்று ஆசிரியர் சேக்கிழார் கூறுகிறார். . . -