பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 131 தெளிவான முறையில் ஆட்சி விளங்காதபொழுது “<bsu&xırıb» (Recorded Evidence) Lyu 16öru@äp5ı, s?5ı: {ağ@5 அடுத்தபடியாக தமிழர் இதனைக் கொண்டனர். மூன்றா வதாக உள்ளதே அயலார் தங்கள் சாட்சி (Eye Witnesses) என்பதாம். இம்மூன்றில் யாதானும் ஒன்றைக் காட்டி வழக்கை நிறுவுமாறு கேட்கின்றனர் நீதிமன்றதார்கள். இந்நிலையில் அந்தணக் கிழவர் வடிவு கொண்டு வந்த இறைவன் தம்பால் உள்ள மூல ஓலையைக் காட்டுகிறார். அதில் நாவலூரில் நம்பியாரூரரும் அவருடைய மரபோரும் வெண்ணெய்நல்லூரில் வாழும் இக்கிழவருக்கு அடிமையாவர் என எழுதப்பட்டுள்ளது ஆனால், பழைய நம்பியாரூரர் எழுதிய கையெழுத்துதான் இது என்பதை எப்படிக் கூறுவது? அதற்கு நீதிமன்றத்தார் ஒரு வழியைக் கையாள்கின்றனர். அப்பழைய ஆரூரர் எழுதியுள்ள ஒர் ஒலையை மிக்க பாதுகாப்புடன் வரவழைத்து ஒத்துப் பார்த்தார்களாம். 44

  • * * * * * * * * * * * * * * *

..............ஒலை அரண்தரு காப்பில் வேறு ஒன்று அழைத்துடன் ஒப்பு கோக்கி" (பெ.பு.-தடுத்தாள், 62) என்று சேக்கிழார் கூறும்போது பழந்தமிழ்நாட்டின் நீதி மன்றம், நீதிபதிகள், அவர்கள் பழக்க வழக்கங்கள் என்பவை பற்றி நாம் ஒருவாறு அறிய முடிகிறது. இதனையடுத்து வரலாறு மிக விரைவில் செல்கிறது. அக்கிழவர் யார் என்பதை நம்பியாரூரர் விரைவில் அறிந்து கொள்கிறார். வெண்ணெய் நல்லூர் திருக்கோயிலுட் சென்ற இறைவனைப் பாடுகிறார். ஒலை காட்டிய சமயத்தில் அவரைப் பித்தன் என்று ஏசினமையால் இப்பொழுதும் "பித்தா பிறை சூடி என்று தொடங்கிப் பாடுகிறார். இந்த விநாடியிலிருந்து திருநாவலூரர் வேற்று மனிதராகி விடுகிறார். இதுவரை அவருக்கு இருந்த உலகக் கட்டு முதல்