பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 183 பெரியவராகிய நாவுக்கரசர் கையால் தொண்டு செய்த ஊருக்குள் யான் காலால் நடந்து செல்வது முறை அன்று' என நம்பியாரூரர் நினைக்கிறார்; நினைப்பது மட்டுமன்று. அவ்வூருள் சென்று இறைவனைக்கூட வணங்காமல், ஊரின் அருகில் உள்ள 'சித்தவடமடம்' என்ற மடத்தில் தங்கி இரவுப் பொழுதைக் கழிக்க முடிவு செய்து அவ்வாறே தங்கியும் விட்டார். இறைவனால் நேரே தடுத்து ஆட்கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவர் நம்பியாரூரர்; அரசனால் வளர்க்கப் பெற்றவர்; இறைவனுடைய தோழராக இருப்பவர். என்றாலும், தமக்கு முன்னர் வாழ்ந்த பெரியார்களைப் பாராட்டும் முறை நாம் கண்டு பின்பற்றற்கு உரியதாயுள்ளது. ஆனால், நம்பியாரூரர் மட்டும் இவ்வாறு செய்தாரோ என்று நினைத்துவிட வேண்டாம். பெரியார்கள் பரம்பரையே இவ்வாறு இருக்கும். - - இதே கருத்துப்பட, நீதிநெறி விளக்கம்’ என்ற நூலில் (பாட்டு-0ே) குமரகுருபரர், - - "பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் பாண்டும் மறவாமே கோற்பது ஒன்றுஉண்டு-பிறர்பிறர் சீர்எல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து பார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்.’ என்று கூறுகிறார். ஒருவன் புகழடைய வேண்டுமானால் அவன் பிறருடைய புகழை மட்டும் எடுத்துக் கூறி, அவருடைய குற்றத்தை மறைத்து யாவர்க்கும் எ ளி ய னாக நடந்துகொள்ள வேண்டுமாம். - - திருஞானசம்பந்தர் தம்மை இறைவனுடைய பிள்னை என்றே கூறிக்கொள்ளுதலைத் தேவாரம் முழுவதிலும் காணலாம். தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்? என்று பல்லிடங்களில் தம்மைக் கூறிக் கொள்கிறார் அந்தணர் குலத்து உதித்து, அம்மையால் ஞானப்பால்