பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 தேசீய இலக்கியம் முதிர்ந்தவராயும் ஏழையாயும் இருந்தால் இக் காட்சி இன்னும் மோசமான நிலைக்கும் சென்றுவிடுவதுண்டு. இந்த அநுபவத்தை மனத்துட்கொண்டு அன்று இரவு சித்தமடத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியைக் காண்டல் வேண்டும். நம்பியாரூரரை மிதித்தவர் தம்மைக் கிழவர் என்று கூறித் கொண்டார். தம் தலையில் ஒருவருடைய கால்கள் படுகின்றன என்பதை உணர்ந்த ஆரூரர் அந்தனரே, உம் அடியை என் சென்னியில் வைத்தீர்? என்று கூறுகிறார் இவ் வார்த்தைகளில் எந்தவிதமான அருவருப்போ கோபமோ இருப்பதாகத் தெரியவில்லை; நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைப் பிறர் ஒருவருக்கு எடுத்துக் கூறும் முகமாக அமைந்துள்ளன இச் சொற்கள். இதனைக் கேட்ட அக் கிழவர் மன்னிப்பு வேண்டும் முறையில் திசை அறியா வகை செய்தது என்னுடைய மூப்புக் காண்’ என்றே கூறுகிறார். "அக்கிலைஆ ருரன்உணர்ந்து அருமறையோய் உன்அடிஎன் சென்னியில்வைத் தனை'என்னத் 'திசைஅறியா வகைசெய்தது என்னுடைய மூப்புக்காண்’ என்றருள அதற்கு இசைக்து தன்முடிஅப் பால்வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ்நாதன் " (பெ. பு-தடுத்தாள் 86) எவ்வளவுதான் ஒருவர் மூப்படைந்திருந்தாலும் பிறரு டைய தலையில் தம் கால்கள் படும்படி உறங்குதல் பொருத்த மில்லை அல்லவா? இதில் ஒரு சிறப்பும் இருக்கிறது. தம் தலையில் கால்கள் பட்டுவிட்டன என்று மட்டும் ஆரூரர் கூறி னாரே தவிரப் பெரியவரை அப்பால் சென்று படுக்குமாறு கூறவில்லை. மூப்புக் காரணமாகவே இது நிகழ்ந்துவிட்டது என்பதைப் பெரியவர் கூறவும். அவ்வாறானால் வேறு இடத் தில் சென்று உறங்குங்கள் என்று சுலபமாகக் கூறிவிடாமல்