பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 தேசீய இலக்கியம் நம்பியாரூரர் பல முறையும் இவ்வாறு மிதித்தனை, நீ யார்?' என்று கேட்கும்பொழுதுதான் கிழவர் மிதித்தது ஒரு முறையல்ல, இரு முறையல்ல, பன்முறை என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு பன்முறை ஒருவரை மிதிக்க வேண்டுமானால் இது மிதிப்பவருடைய மூப்பினால் நிகழ்ந்தது என்று கூற யாரும் துணியமாட்டார்கள். எனினும், ஆரூரர் காரணம் கேட்கும் ஒவ்வொரு முறையும் கிழவர் இதே காரணத்தைக் கூறி இருத்தல் வேண்டும். ஆதலால்தான் இறுதியாக மிதித்ததன் காரணத்தை அறிய விரும்பாமல் மிதித்தவர் யார் என்று அறிய விரும்புகிறார். விடிய விடிய இச் செயல் நிகழ்கின்றது. செய்பவர் ஒரே கிழவர்; செய்வதற்கு ஒரே காரணத்தைத் திருப்பித் திருப்பிக் கூறு கிறார். செய்யப்படுபவரோ அரசருடைய வீட்டில் வளர்ந்து திருமணக்கோலம் கொண்டுள்ள இளமை நிலையில் உள்ளவர். இந்தச் சூழ்நிலையில் ஆரூரருக்கு எத்துணைக் கோபம் வந்தாலும், கிழவரை எத்துணை ஏசினாலும், இல்லை, தண்டித்தாலும் அதனால் தவறு இல்லை என்றே கூறுவோம். ஆனால், இங்கு ஆரூரர் பேசிய பேச்சிலிருந்துதான் அவருடைய பண்பாட்டை நாம் அறிய முடிகிறது. ஒரு சிறிதும் வெறுப்போ, கோபமோ அடையாமல் ஐயா, தாங்கள் மிதிப்பதுபற்றி யான் கவலை கொள்ளவில்லை. ஆனால், காரணம் தெரியாமல் மிதிபடுவதை யான் விரும்பவில்லை. தயைகூர்ந்து காரணத்தைக் கூறிவிட்டுப் பிறகு தாராளமாக உதையுங்கள், பட்டுக்கொள்கிறேன்' என்று கூறுபவர் போல "நீ யார் என்று மட்டும் கூறுகிறார். "செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக் காக்கில்என் கயவாக்கால் என்?" - என்ற திருக்குறள் (801) நினைவிற்கு வருகிறது. ஒரு மனிதன் தன் கோபத்தை அடக்க வேண்டிய இடத்தைக் கூறுகிறார் ஆசிரியர். தன்னைவிட எளியவன் மேல் வருகிற கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்தான் பண்பாட்டைத் தெரிவிக்குமே அன்றி வலியவன்மேல் வந்த கோபத்தை