பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 139 அடக்கிக் கொண்டேன் என்று கூறுவதில் பொருள் ஒன்றுமில்லை. வந்த கோபத்தை அடக்கிக் கொள்ளுதலைச் சிறந்த செயல் என்று கூறலாமேனும் கோபமே வாராதிருத்தல் அதனினும் சிறந்த தன்றோ? இக் குறளின் முற்பகுதிக்கு முற்றிலும் இலக்கியமாகிறார் ஆரூரர். பல அன்பர்கள் புடைசூழ இளமை முறுக்குடன் இருப்பவர் ஆரூரர்: மிதித்தவரோ தொண்டு கிழவர். ஆரூரர் அவரைத் தண்டிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் நன்கு தண்டித் திருக்கலாம். திக்கற்ற கிழவரைத் தண்டித்தல் தவறு என்றாலும் தண்டனைக்குரிய குற்றத்தை ஒரு முறையல்ல. பன்முறையும் செய்துவிட்டார் கிழவர். பன்முறையும் அவர் செய்தது அறியாமையால் என்று கூறுவதற்கும் இல்லை. கிழவர் செய்வது தவறு என்று எடுத்துக் கூறியவிடத்தும் அவர் அதனை மீட்டும் மீட்டும் செய்தார் என்றால் அவரை மன்னியாது தண்டித்தால் அதனால் தண்டித்தவரைக் குறை கூற வழி ஒன்றும் இல்லை. என்றாலும் கிழவரைத் தண்டிக்காமல் விட்டுவிடுகிறார் ஆரூரர். அவர்மேல் வந்த கோபத்தை அடக்கிக்கொண்டார் என்றுகூடக் கூறுவதற் கில்லை. கோபம் வந்து அதனை அடக்கியதாக நினைப்ப தற்கும் இடம் இல்லை. கோபம் தோன்றிப் பின்னர் ஆரூார் அதனை அடக்கி இருந்தால் அக் கோபத்தின் நிழல் அவருடைய சொற்களில் பிரதிபலியாமல் இரா. ஆனால், சொன்ன சொற்கள். யாரும் யாரைப் பார்த்தும் கூறக் கூடியன. ஆதலால்தான் அவர் சின்மே கொள்ளவில்லை என்று கூறுகிறோம். - நம்பியாரூரரின் இப் பண்பாட்டைச் சேக்கிழார் மிகவும் அனுபவிக்கிறார். பண்பாடுடையவர்களை அறிந்துகொள்ளப் பல வழிகள் உண்டு. அவற்றுள் ஒன்று. அவர் வாயிலிருந்து வெளிவரும் சொற்கள்மூலம் அறிவது. ஒருவன் பேசும் சொற்களே அவனைப் பற்றிப் பிறர் அறிந்துகொள்ளக் கருவி யாக அமைவன. மன அடக்கம் இல்லாதபொழுது சொல் அடக்கம் வருதல் என்பது இயலாத காரியும். ஆனால்