பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#42 தேசீய இலக்கியம் அம்பலம் என்றால் திறந்தவெளி என்பது பொருள். இத் திறந்த வெளியில் (ஆகாசத்தில்) இறைவன் ஓயாது ஒழியாது ஆடுகிறான். அவ் ஆட்டத்தின் பொருளை உணர்ந்து வழி படுகிற அடியார்கட்கு அவ் ஆட்டம் மிக்க இன்பத்தைத் தருவது. நம்பியாரூரர் இத்தகைய அம்பலத்தைச் சென்று காண்கிறார். அக்காட்சியில் ஈடுபட்டார்; தம்மை மறந்தார். இதோ ஆரூரர்தில்லை அம்பலவனை வழிபட்ட முறையைச் சேக்கிழார் கூறுகிறார்; 'ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் கான்கும் சிங்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும் திருந்துசாத் துவிகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லை இல் தனிப்பெரும் கூத்தின் வந்த பேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறுஇலா மகிழ்ச்சியில் மலர்தார்” (பெ. பு-தடுத்தாள்.,106) (ஐந்து பொறிகளும் அடங்கிக் கண் ஒன்று மட்டும் பயன்பட. அந்தக்கரணங்கள் நான்கும் அடங்கிச் சிந்தை வழிச்செல்ல, முக்குணங்களுள் சத்வகுணமே மிகுந்து நிற்க, சந்திரனைச் சூடிய பெருமான் ஆடுங் கூத்தில் தம்மை மறந்து இன்ப வெள்ளத்துள் மிதப்பார்.) - சில சமயம் நாம் , யோசனையில் ஆழ்ந்தபடியே தெரு வில் நடந்து செல்கிறோம். நம்முடைய கண்கள் பலரைப் பார்க்கின்றன. ஆனாலும், யாரையும் பார்த்த நினைவு நம்மிடம் தங்குவதில்லை. காரணம் யாது? கண்ணாகிய ஒரு பொறி ஒரு பொருளைக் கண்டாலும், மனமும் சேர்ந்து கண்ணின் வழிச் சென்றால் ஒழியப் பயன் இல்லை. இதே போல ஆழ்ந்து ஒரு பொருளை நோக்கும்பொழுது காதில் விழும் ஒலிகளை நாம் அறிய முடிவதில்லை. இத்தகைய ஒரு நிலையைத்தான் சிதம்பரத்தில் ஆரூரர் பெறுகிறார். ஐந்து