பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 148 பெரிய பொறி அறிவுகளும் கண்களின்மூலமே வேலை செய்யத் தொடங்கினவாம். ஒவ்வொரு பொறியும் தனித் தனி வேலை செய்யும்பொழுது எவ்வளவு ஆழ்ந்து நிற்குமோ அவ்வளவும் சேர்ந்து கண்ணின்மூலம் வேலை செய்தன. இனி, இதனை அடுத்து மனித மன்த்தில் ஆழத்தில் கானப் பெறுவன அந்தக்கரணங்கள் என்பவையாம். மனம், சித்தம் புத்தி அகங்காரம் என்ற இவற்றுள் இரண்டாவ தாக நின்ற சிந்தையில் அம்பலக் கூத்தனின் சிந்தனை நிறைந்துவிட்டதாம். அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக, என்ற அடியில் சேக்கிழார் இதனையே குறிக்கிறார். மனிதனிடம் காணப்பெறும் குணங்களை, தாமச குணம், இராஜச குணம், சத்துவ குணம் என்று பிரிப்பர். உயர்ந்த பெரியோர்களிடம் காணப்படுவது சத்துவ குணம். ஒவ் வொருவருடைய அன்றாட வாழ்விலும் இம் மூன்று குணங் களும் மாறி மாறி வருமேனும், பெரியோர்களிடம் சத்துவம்' மிகுதியாகவும் இருத்தல் உண்டு. ஆண்டவனுடைய திருமுன்னர் நிற்கின்ற ஆரூரருக்கு இம் மூன்று குணங்களும் இருக்கவேண்டிய இடத்தில் சத்துவ குணமே நிறைந்து இருந்ததாம். இதனைத்தான் ஆசிரியர் குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக’ என்றும் குறிப்பிடுகிறார். தில்லை சென்ற நம்பியாரூரர் வழிபட்ட முறையைச் சுருக்கிக் கூறலாம், கும்பிடுகின்ற ஆரூரர், கும்பிடப்படு கின்ற அம்பலவர், கும்பிடுவதால் பெறுகிற இன்பமாகிய அனுபவம் என்ற மூன்றும் போக, அனுபவம் ஒன்றுமட்டுமே எஞ்சி நிற்கின்றது. இவ்வாறு பெறுகிற இன்ப அனுபவம் ஒன்றுமட்டும் எஞ்ச, இறைவன்ை வணங்குவதே சிறந்த வழிபாட்டு முறை எனப்படும். இவ்விதம் இறைவனை வழி படும் பேறுபெற்ற பெரியோர்கள் தம் பிறவியை வெறுப்ப தில்லை. அதற்கு மறுதலையாக இப் பிறவி வேண்டும் என்று விரும்புவார்கள். இப் பிறவியில் இறைவனைக் கும்பிட்டு