பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தேசீய இலக்கியம் அவர் கணிகையர் குலத்தில் தோன்றிய காரணத்தால் பலரும் அவரைக் கண்டிருக்க நியாயம் உண்டு. ஆம். கண்டிருக்க லாமே தவிர, அவரைக் காதலிக்கும் துணிவு பெற்றிருக்க மாட்டார்கள். பரவையார் மனம் இறைவன் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த நிலையில் அவரைப் பிறர் காதலித்திருக்கலாம் என்று எண்ணு வது இயலாத காரியம். ஆதலால்தான் பரவையாரை ஆரூரர் கண்டு காதல் கொண்டது இறைவன் திருவருள் என்று கூறுகிறார் சேக்கிழார். பெரியோர்கள் தம் வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் இறைவன் திரு வருளால் நிகழ்ந்தன என்றே நினைப்பர். இந்நிலையில் ஆரூரர் பரவையாரையும். பரவையார் ஆரூரரையும் ஒரு கண நேரம் கண்டு சென்றுவிட்டனர். இக் கண நேரத்தில் இருவரும் மாறிச் சென்று ஒருவர் மனத்தில் ஒருவர் அமர்ந்து விட்டனர். பரவையாரைப்பற்றிக் கூறவந்த ஆசிரியர் 'அணடர்பிரான் திருவருளால் அயல் அறியா மனம் விரும்பப் பண்டைவிதி கடை கூட்டப் பரவையாரும் கண்டார். (டிை.142) என்று கூறும் முறையில் பிறரைக் காண விரும்பாத பரவையார் ஆரூரரை மட்டும் ஏன் கண்டார் எனில் விதியே இவ்வாறு செய்தது எனக் கூறுகிறார். பரவையைக் கண்டு தம் மனத்தை அவள்பால் பறி கொடுத்த ஆரூரர். தம் இல்லம் சென்று வருந்துகிறார். காதலியைப் பற்றிக் காதலன் காணும் கனவு இதோ பேசப் படுகிறது. " கற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ பொற்புடைய புணணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ . அற்புதமோ சிவன் அருனோ அறியேன் என்று அதிசயித்தார்" (பெ.பு-தடுத்தாள், 140) தம் காதலியைப் பற்றிக் கற்பகத்தின் பூங்கொம்பு என்றும், காமன்தன் பெருவாழ்வு என்றும் பேசுபவர் உலகில்