பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.48 தேசிய இலக்கியம் வாழ்ந்த பெரியோர்கள் அக் கட்டு அல்லது பந்தத்தையும் இறைவன் அருளாகவே மதித்தனர். இக் கருத்தையே மாணிக்கவாசகரும் பந்தமுமாய் விடும் ஆயினார்க்கு என்று பொற்சுண்ணப் பதிகத்தின் இறுதிப் பாடலில் குறிக்கிறார். ஆதலால் ஆரூரர், - "பக்தம் வீடு தரும்பர மன்கழல் சிங்தை ஆர்வுற உன்னும்ான் சிந்தையை வந்து மணல்செய்து மான்என வேவிழித்து எங்தை யார் அருள் எர்கெறிச் சென்றதே" (பெ.பு. -தடுத்தாள், 154) என்று வருந்துகிறார். ஆரூரர் வருத்தத்தை மிகுதிப் படுத்தவே போலும் காதலர்கட்குத் துன்பஞ் செய்யும் மாலைக் காலம் வந்து இருளும் க்விந்துவிட்டது. காதலர்க்கு நெருப்பைவாரி இறைப்பவனாகிய சந்திரன் தோன்றுகிறான். அதனைக் கவிஞன் இதோ கூறுகிறான்; இரவாகிய பெண் சிரிக்கிறாளாம், நிலவாகிய பற்களைக்காட்டி. ஏன் தெரியுமா? வன் தொண்டராகிய ஆரூரரே ஒரு பெண் பொருட்டு இவ்வாறு வருந்தினால் ஏனைய ஆண் மக்கள் என்ன கதி ஆவார்கள் என்று கேட்டுச் சிரித்தாளாம். "மறுவில் சிங்தைவன் தொண்டர் வருந்தினால் இறும ருங்குலார்க்கு யார்பிழைப் பார் என்று நறும லர்க்கங்குல் கங்கைமுன் கொண்டபுன் முறுவல் என்ன முகிழ்த்தது வெண்ணிலா" (பெ.பு. தடுத்தாள்-160) திருமணமும் சீர்திருத்தமும் - பரவையாரைப் பிரிந்து துயில் கொள்ளாமல் நம்பி யாருரர் வருந்திய விதத்தைக் கண்டோம. அதேபோல நம்பியாரூரைக் கண்டதிலிருந்து அவர்பால் தன்னெஞ்சைப் பறிகொடுத்த பரவையாரும் ஆரூரரைப் போலவே வருந்து கிறார். மணிநிலா முன்றலில் மலர்ப் படுககையில்: வந்து