பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 149 படுத்த பரவையார் மனம் நிலைகொள்ளாமல் தவிக்கிறார். முன்பின் தெரியாத ஒருவர்மாட்டுத் தம் மனத்தை விட்டு விட்ட அவர், அவ்வாடவரை யார் என்று அறிந்து கொள்ளக்கூட இல்லை ஆடவர்களைப்போல் மாதவர்கள் தம் மனக்கருத்தை விரைவில் வெளியிடுவதில்லை. அதுவும் அக் கருத்து, காதல் தொடர்புடையதாக இருப்பின் பிறரிடம் எளிதாகக் கூறிவிட மாட்டார்கள், - "குடத்து விளக்கேபோல் கொம்பு அன்னர் காமம் வெளிப்படா பூத்தார் வழுதி-வெளிப்படின் ஆபுகு மாலை அணிவரைமேல் தீயேபோல் ஊர்அறி கெளவைதரும்" என்ற பழம் பாடல் உண்மையை நன்கு விளக்குகிறது. வெளிப்படாத நிலையிலிருந்த பரவையார் காதல், வெளிப்படும் அளவுக்கு வந்துவிட்டது. தாங்கும் அளவைக் கடந்துவிட்ட பரவையார் அவ்வளவில் அருகிலிருந்த சேடி முகம் நேர் நோக்கித் தன் மனத்தில் உழன்றுகொண்டே இருந்த வினாவைக் கேட்டுவிட்டார். அவ்வினா, தாம் சந்தித்த அவ் ஆடவர் பெருமகன் யார்? என்பதுதான். அதற்கு அச் சேடி, இவ்வுலகில் அந்தணராய் இருவர் தேடு ஒருவர் தாம் எதிர்நின்று ஆண்ட சைவ முதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி’ என்று விடை கூறினார். அவர் யார் என்ற பரவையின் வினாவுக்குத் தம்பிரான் தோழர்' என்று அத் தோழி விடை கூறி இருந்தாலே போதுமானது. ஆனால், அவர் பெயரை மட்டும் குறிப் பிட்டால் எந்த ஊரார், எந்த மனநிலை உடையார், திருமணம் ஆனவரா முதலான வினாக்கள் தொடங்கு மல்லவா? எனவே, அறிவுமிகுந்த அத் தோழி, பரவையார் மன நிலையை அறிந்துகொண்டு அவர் பின்னர் கேட்கக் கூடிய அத்தனை வினாக்களையும் மனத்தில் எதிர்பார்த்து, அவ் வினாக்கள் தோன்றுமுன்னரே அவை அனைத்திற்கும்