பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தேசீய இலக்கியம் விடை கூறிவிடுகிறார். இவ்வாறு வின்ா இல்லாமலே அவற்றை எதிர்பார்த்து விடைகூறும் சிறப்பைச் சொற். செல்வம் என்று கூறுவார்கள். இத்தகைய சொற்செல்வம் படைத்த ஒருத்தியே பரவையின் உயிர்த் தோழியாக இருந்திருக்க வேண்டும். நம்பியாரூரர் அந்தணர் என்பதும், திருமணத்தின்போது அவர் இறைவனால் தடுத்து ஆட் கொள்ளப்பெற்றவர் என்பதும், சைவப்பற்று மிகுதியும் உடையவர் என்பதும் அவர் கூறிய விவரங்கள், இவை அனைத்தையும் காட்டிலும் இறைவனிடம் பேர் அன்பு பூண்டவர் என்பதே மிக முக்கியமான செய்தியாகும். ஏனெனில், இச் செய்தி நம்பியாரூரராகிய அந்தணரையும், பரவையாராகிய பதியிலார் குலத்தவரையும் ஒர் இனத்தவராக ஆக்கிவிட்டது. இறைவன் அடியார்களுள் சாதிபேதம் ஏது? அவர்கள் அனைவரும் ஒரே இனந்தான். எம்பிரான் தமரேயோ?? என்னா முன்னம் வன் தொண்டர்பால் வைத்த மனக் காதல் அளவின்றி வளர்ந்து பொங்கிவிட்டதாம் பரவையாருக்கு. தம்மால் காதலிக்கப்பட்ட வரின் ஏனைய குணநலங்களைக் காட்டிலும் அவர்களுடைய குறிக்கோளும் தம்முடைய குறிக்கோளும் ஒன்று என்று ஆகிவிடுமாயின் காதலர்கட்கு அதனைவிட இன்பம் தருவது வேறு யாது உளது? இச் செய்தி பரவையாருக்குப் பெரிய உவகையைத் தந்தபோதிலும், அந்த நேரத்துக்கு அவருடைய துன்பத்தைத் தணிக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தால், தோழிமார்கள் சில காரியங்களைச் செய்தனர். ஆனால், அவர்கள் செய்த அனைத்தும் நேர்மாறான பயனைத் தந்தனவாம். .-- . . . அவர்கள் செய்த செயல்கள்தாம் என்ன தெரியுமா? நல்ல வாசனை பொருந்திய சந்தனத்தைக் கொண்டுவந்து பூசினார்கள். பன்னீர்த் திவலை மேலே படும்படியாக வீசினார்கள். ஈரத்தோடு கூடிய நீர்க்குளிரி என்னும் கொடியில் படுக்கவைத்தார்கள். இன்னும் அவர்கள் அறிந்த உபசரணை அனைத்தையும் செய்தார்கள். ஏன்?. காதல்