பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 151 நோய்கொண்ட பரவையார் வெப்பம் தாங்கமாட்டாமல் பட்ட துன்பத்தைக் குறைக்கவே சந்தனம் முதலியவற்றைப் பூசினார்கள். ஆனால், குளிர்ச்சி பொருந்திய சந்தனக் குழம்பு பரவையாருக்கு நெருப்பாகக் கொதித்ததாம். அந் நெருப்பில் போடும் சமித்தைப்போல மன்மதனும் தன் அம்புகளை அவர் மேல் எய்தானாம். 'ஆரம்கறும் சேறுஆட்டி அரும் பணிர்ே ாறுக்திவலை அருகு வீசி ஈரஇளம் தளிர்குளிரி படுத்துமட வார்செய்த இவையும் எல்லாம் பேரழலின் கெய்சொரிந்தால் ஒத்தனமற். றதன்மீது சமிதை என்ன மாரனும்தன் பெரும்சிலையின் வலிகாட்டி மலர்வாளி சொரிந்தான் வந்து - (பெ.பு-தடுத்தாள்: 173) (ஆரம்-சந்தனம்: குளிர்-ஒருவகைக் கொடி சமிதை. நெருப்பில் போடும் சமித்துக் குச்சிகள்; மாரன்.காமன்; மலர்வாளி-மலர் அம்புகள்.) சந்தனம் நெருப்புப்போல் சுடுவதும், தென்றல் காற்று சுடுவதும், இளம் பிறைச் சந்திரன் அனலை இறைப்பது காதல் கைகூடாத இடத்துக் காதலர்கள் அடைகின்ற அனுபவம். பரவையார் பட்ட துயரை இதே சேக்கிழார் குறிக்கிறார். மலர் அமளித் துயில் ஆற்றாள். வரும் தென்றல் மருங்கு ஆற்றாள்' என்ற இவ்வனுபவம் நம்பியாரூரரைப் பெறமுடியாத பரவையாரின் அனுபவம். மற்றொரு பெண்ணின் அனுபவத்தை நந்திக் கலம்பக ஆசிரியரும் குறிக்கிறார். - "செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழும் சீதச் சந்தன மென்று யாரோ தடவினார்' - இனி, ஒரு பெண்ணுக்கு இதே சந்தனமும், தென்றலும், இளம்பிறைச் சந்திரனும் நெருப்பாகி விட்டது; அப் பெண்