பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தேசிய இலக்கியம் தீர்க்க இறைவனையன்றி வேறு யாராலும் இயலாது என்ற் உறுதிப்பாட்டை அவர்கள் பேச்சில் காணமுடிகிறது. அம் மட்டோடு இல்லை உன்பால் அன்பு இல்லாதவர்கள்போல் யான் வருந்துவதும் முறையோ என்று பரவையார் பேசுவதும் அறிதற்குரியது. துயரம் என்பது அ ைன வ ரு க் கும் பொதுவானதுதான். ஆனால் ஆண்டவனிடம் அன்புடை யவர்கள் தம் துயரைப் பிரார்த்தனை மூலம் போக்கிக் கொள் கின்றனர். பிரார்த்தனையால் அவர்கள் சாதித்துக்கொள்ளாத செயலே இல்லை என்றுகூடக் கூறிவிடலாம். More things are wrought by prayer than this world dreams of Gróirp கவிஞர் டென்னிஸன் பாடல் வரிகள் இவண் ஒப்பு நோக்கத் தக்கன. {} பரவையார் இறைவனை வேண்டும் அதே நேரத்தில் நம்பியாரூரரும் இறைவனை வேண்டுகிறார். இருவரும் ஒரு முகப்பட்ட மனத்துடன் வேண்டினால் அது நடவாது போய் விடுமா? இறைவன் அருள் திருவாரூரில் வாழும் அன்பர்கள் மூலம் வெளிப்படுகிறது. அத்தொண்டர்கள் அனைவரும் கூடி மறுநாளே நம்பியாரூரருக்கும் பரவையாருக்கும் சிறந்த முறையில் திருமணம் நிகழ்வித்தனர். காவியப் புதையல் பரவையாரை மணந்துகொண்ட நம்பியாரூரர் திருவா ரூரிலேயே தங்கிவிட்டார். பரவையாரோடு இல்லறம் நடத்தி யும் தியாகேசனை வணங்கி ஆனந்தம் பெற்றும் நாள்களைக் கழித்துக்கொண்டிருக்கிறார். ஆண்டவனிடம் தோழமை கொண்டு பழகினாராதலின் தாம் கொண்ட மாப்பிள்ளைக் கோலத்துடன் திருக்கோயில் செல்வதும் வருவதுமாக இருந்தார். எக்கோலம் கொண்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தே என்ற முதுமொழிக்கு இணங்க, ஆரூரர் மாப்பிள்ளைக் கோலத்துடன் கோயிலுக்குச் சென்றாலும் அவருடைய மனம் இறைவனிடம் ஈடுபட்டிருந்த தாதலின் புறக் கோலத்தால் தவறு நேரவில்லை. அந்தரத்து அமரர் போற்ற அணிகிளர் ஆடை சாத்தி, சந்தனத்து