பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 155 அளறு தோய்ந்த குங்குமக் கலவை சாத்தி சுந்தரச்சுழியம் சாத்தி, சுடர்மணிக் கலன்கள் சாத்தி, இந்திரத் திருவின் மேலாம் எழில் பெற விளங்கித் தோன்ற (184 அப்பெரியார் வாழ்ந்த வாழ்க்கை நமக்கு அறிவிக்கப்படுகிறது. ஏனைய நாடுகளில் தோன்றிய சமயங்கள் எண்ணற்ற கட்டுப்பாடுகளை வகுத்து இவற்றைக் கையாண்டால் ஒழிய, வீடு பேற்றை அடைய முடியாது என்று கூறவும் இந்நாட்டில் தோன்றிய சமயங்கள் மட்டும் இதுபற்றி வேறு கருத்துக் கொண்டன. ஆண்டவனால் உண்டாக்கப் பெற்ற இப்பரந்த உலகில் உள்ள பொருள்களை நாம் அனுபவிக்காமல் இருக்க வேண்டும் என்பது இறைவன் கருத்தானால் ஏன் இப் பொருள்களைப் படைத்தான்? படைப்பின் கருத்தை அறியாதவர்களே பொறி புலன்களால் அனுபவிக்கப் பெறுவனவற்றை வேண்டாம் என்பார்கள். ஒன்றிலும் பொறிபுலன் செல்லாமல் அடக்க வேண்டும் என்றால் ஏன் இவைகள் படைக்கப்பட்டன? இது கருதியே போலும் திருமூலநாயனார், 'ஐந்தும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார் ஐந்தும் அடக்கும் அமரரும் அங்கில்லை’ என்று திருமந்திரத்தில் அருளினார். எனவே எல்லாப் பொருள்களையும் அனுபவித்துக் கொண்டே மனத்தை மட்டும் இறைவன் திருவடியில் வைத்திருந்தால் .ே பாது ம | ன து. இது கருதியே "திருநாவுக்கரசர்", - புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவாது இருக்க வரக்தரல் வேண்டும்' என்றார். மேலே கூறிய முறையில் மாப்பிள்ளைக் கோலத்துடன் திருவாரூர்க் கோயிலுக்கு ஒரு நாள் நம்பியாரூரர் சென்றார். திருக்கோயிலின் முன்மண்டபம் தேவாசிரிய மண்டபம்: என்று கூறப்படும். அந்த நாளில் இறைவனுடைய அடியார்கள் அம் மண்டபத்தில் நிறைந்து இருப்பார்கள்.