பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{56 தேசீய இலக்கியt அவ்வடியார்களைக் கண்ட ஆரூரர் இவ்வடியார்க்கு நான் அடியவனாக ஆகும் நாள் என்றோ என்று எண்ணிக் கொண்டே இறைவனை வணங்கப் போனார். இறைவன் அருளால் அடியார்கள் பெருமை உணர்த்தப் பெற்றார் ஆரூரர். முன்னர் கூறியபடி, இத் தமிழர்கள், அடியார்களை இறைவனைக் காட்டிலும் போற்றினார்கள். எனவே, ஆரூரர் முன் தோன்றி, இறைவனே அடியார் பெருமையை இதோ பேசுகிறான், 'பெருமையால் நம்மை ஒப்பார் பேணலால் எம்மைப் பெற்றார் ஒருமையால் உலகை வெல்வார் ஊணமேல் ஒன்றும் இல்லார் அருமையால் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார் இருமையும் கடந்து கின்றார் இவரை நீ அடைவாய்' அடியார்கள் பெருமைக்கு உவமை கூற வேறு பொருளே இல்லையாதலால், தம்மை ஒப்பார் என்று கூறினார். இவ்வளவு பெருமை அவர்கட்கு வரக் காரணம் யாது என்ற வினாவிற்கு விடை கூறுவார் போன்று, 'நெஞ்சு உறுதியிலும் ஒருமுகப்பட்ட தியானத்திலும் உலகையே வென்று விடக் கூடியவர்கள் என்றும் கூறுகிறார். இத்தகைய அடியார்கட்குத் தாமும் அடியவனாக ஆக வேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப் பெற்ற நம்பியாரூரார் இறைவனை வேண்டுகிறார் இறைவன் திருவருளால் "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று தொடங்கி, அவர் காலத்தும் அவருடைய காலத்தின் முன்னும் தமிழ் நாட்டில் வாழ்ந்த அடியார்கள் அனைவரையும் குறிப்பிட்டு அனைவருக்கும் அடியேன் என்று பாடினார். நம்பியாரூரர் பாடிய இப் பதினொரு பாடல்களும் திருத் தொண்டத் தொகை என்று கூறப்பெறும். இப் பாடல்