பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 157 களின் மூலம் நம்பியாரூரர் தமிழ்நாட்டிற்கும் தமிழ்மொழிக்கும் ஓர் ஒப்பற்ற தொண்டைச் செய்து விட்டார் என்று கூறலாம். வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இல்லாமல் இன்ப வேட்டை ஒன்றையே வாழ்க்கையின் பயன் என்று கொண்டிருந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி, ஒரு குறிக்கோளுடன் வாழ்ந்து பயன் அடையச் செய்த பெருமை, பெரிய புராணம் பாடிய சேக்கிழாருக்கு உரியது ஆனால், சேக்கிழார் பெரியபுராணம் பாடக் காரணமாக இருந்தது திருத்தொண்டத் தொகையாகும். ஆதலால்தான் உயிர்கள்மாட்டுக் கொண்ட கருணையினால் திருத்தொண்டத் தொகையை நம்பியாரூரர் பாடினார்: "அவ்வாறு பாடிய அவருடைய திருவடிகளை வணங்க வந்த இப் பிறவிக்கு வணக்கம் செலுத்துகிறேன்: என்ற பொருளில் பெரிய புராணத்தில் ஒரு பாடல் பாடுகிறார். நேசம் நிறைந்த உள்ளத்தால் லேம் கிறைந்த மணிகண்டத்து ஈசன் அடியார் பெருமையினை - எல்லா உலகும் தொழஎடுத்துத் தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன் வாச மலர்மென் கழல்வணங்க லந்த பிறப்பை வணங்குவாம்" (பெ. பு.-சண்டேசர், 60) இவ்வாறு சேக்கிழார் கூறக் காரணம் யாது? திருத் தொண்டத் தொகை முழுவதும் தமிழ்நாட்டில் பிறந்த அடியார்களினுடைய வரலாற்றையே கூறுகிறது. அதில் கூறப் பெற்றவர்கள் யாவரும் வடவேங்கடம் தென்குமரி யாயிடைத் தமிழ் கூறும் இந் நல்லுலகில் பிறந்தவர்களே யாவர். எவ்வளவு பெரியவர்களும் பிறந்த பொன்னாட்டை விரும்பத் தான் செய்கிறார்கள். நாடு, மொழி, கலை, பண்பாடு என்பவற்றைப் பற்றிப் பேசும் இத்தகைய ஒரு பாடலைத்