பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் Í 63 எனவே, நெல்லுக்கு உரியவரான ஆரூரரிடம் இதனைத் தெரிவித்துவிடலாம் என்ற கருத்துடன் புறப்பட்டார். கிழவரைச் சந்திக்குமாறு இறைவன் ஆருரருடைய கனவில் அருளிச் செய்ய அவரும் புறப்பட்டு வந்தார். இருவரும் இடைவழியில் சந்தித்துக் கொண்டனர். ஆரூரரை விழுந்து வணங்கிய கிழவர், பண்டெலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட அண்டர்தம் பிரானார், தாமே நெல் மலை அளித்தார். டிை 17) என்று கூறுகிறார். இவருடைய சொற்களில் இந் நெல்லைத் தாம் பெற்றதாகவோ தம்பொருட்டு இறைவன் அருள்செய்தது தமக்காக அன்று என்றும் பிறர் பொருட்டாகவே என்றும் நினைப்பதால், தம்மை எளிமையாக நினைந்துகொள்ள ஏதுவாகிறது. இருவருமாக ஆராய்ந்து, இந்நெல் மலையை மனிதர் உதவிகொண்டு திருவாரூர் கொண்டுசேர்க்க முடியாது என்பதை அறிந்துகொண்டனர். இந் நிலையில் ஆரூரர் எண்ணில் சீர்ப் பரவை இல்லத்து இந் நெல்லை எடுக்க ஆளும் தண்ணிலவு அணிந்தார் தாமேதரின் அன்றி ஒண்ணாது (டிை 19) என்று கருதுகிறார். தாம் வாழ்கின்ற வீட்டைக் குறிப்பிடவேண்டியபொழுது 'பரவை இல்லத்து’ என்று நம்பியாரூரர் குறிப்பது நோக்கற் குரியது. இதுவும் பழந்தமிழர் வழக்கம் ஆகும். வீட்டின் தலைவி அவள் ஆகலானும், அவளுக்கு மட்டுமே இல்லாள் என்ற பெயர் இருத்தலானும், வீட்டைக் குறிப்பிடும்பொழுதும் அவளது வீடு என்று குறிப்பிடுவது சாலப் பொருத்தமுடைய தாகும். இந் நெல்லைக் கொண்டுசேர்ப்பது தம்மால் இயலாத செயல் என்பதை அறிந்த ஆரூரர் உடனே இறைவனுடைய கருணையை நாடுகிறார். பஞ்சம் வந்துள்ள நாட்டில் தெரு முழுவதும் நெல் மலையாக நிரப்பியவன் அதனைத் திருவாருர் கொண்டுசேர்க்க மறுத்து விடுவானா? எனவே, குண்டையூரின் பக்கத்திலுள்ள திருக்கோளிலி என்ற ஊரில்