பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 தேசிய இலக்கியம் உள்ள இறைவனைச் சென்று பாடினார். அந்த ஆழதிய பாடலில்தான் எவ்வளவு உலகியல் அறிவும் இறைவனிடத்து அன்பும் ததும்புகின்றன. இதோ ஆரூரர் பாடிய பாடல் : "நீள கினைந்து அடியேன் உமை கித்தலும் கைதொழுவேன் வாளன கண்மடவாள் அவள் வாடி வருக்தாமே கோளிலி எம்பெருமான் குண்டைஊர்ச் சிலகெல்லுப் பெற்றேன் ஆள்.இலை எம்பெருமான் அவை அட்டித்தரப் பணியே’ (திருக்கோளிலியில் இரு க் கும் பெருமானே, உனது பழைய அடிமைகள் அல்லவா யானும் என் இல்லாளும் பரவை இந் நெல் வராமையால் வருந்தும் வருத்தம் நீ அறிவாய். அவள் வருந்தாமல் இந் நெல்லைக் கொண்டுசேர்க்க உதவவேண்டும்.) முதல் இரண்டு அடிகளில் தம் பக்தியின் திறத்தைப் பேசுகிறார் ஆரூரர். பரவையின் வருத்தம் இருவருடைய பக்திப் பெருக்குச் தம் இடையூறு அன்றோ? மனத்தில் ஒரு வருத்தம் தோன்றிவிட்டால் எவ்வாறு ஒருமுகப்பட்ட மனத் துடன் இறைவனை வணங்கமுடியும்? எனவே, 'வாள் போன்ற கண்ணை உடைய பரவை வாடி வருந்தாமல்: என்று கூறுகிறார். பின் இரண்டு அடிகளில் இவ்வடியாரின் கல்விப் பெருக் கமும் உலகியல் அறிவும் நன்கு விளங்குகின்றன. அடியார் கள் என்று கூறியவுடன் அவர்கள் ஏதோ மற்றோர் உலகில்