பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் j65 வாழ்ந்துகொண்டு இவ்வுலக நினைவே இல்லாமல் இருப் பார்கள் என்று பலர் நினைத்தல் கூடும். அவர்கள் பாடல் களைப் படித்துப் பார்த்தால் இது எவ்வளவு தவறான கருத்து என்பது வெளிப்படும். நம்பியாரூரர், நிறைந்த கல்வியறிவும் உலகியல் அறிவும் உள்ளவர் எனச் சேக்கிழார் கூறி இருப்பதை அறிவோம். சேக்கிழார் இதனை எங்கிருந்து அறிந்து கொண்டார்? இப் பெரியாருடைய தேவாரத்தில் நன்கு ஈடுபட்டுக் கற்றமையால், இப் பாடல்களின் பொருள் ஆழத்தை நன்கு அறிந்த பிறகே இவ்வாறு கூறியுள்ளார். இன்று நாம் உலகியலில் காணும் ஒர் அனுபவம் இங்கே பேசப்படுகிறது. நம் வீட்டில் விறகு வாங்கி வைத்திருப்ப தாகக் கொள்வோம். அந்த விறகை உடைக்க ஆள் தேடு கிறோம். ஒர் ஆளைக் கூப்பிட்டு கொஞ்சம் விறகு இருக் கிறது. உடைத்துத் தரமுடியுமா?’ என்றுதானே கேட்கி. றோம், பத்து மூட்டைகள்ை வண்டியில் ஏற்றவேண்டுமென் றாலும், ஆளைப் பார்த்து கொஞ்சம் மூட்டைகள் வண்டியில் ஏற்ற முடியுமா?’ என்றுதானே கேட்கிறோம்? விறகுக்கு ஏற்ற கூலியும் மூட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற கூலியும் கொடுக்கிறோம் என்றாலும், கேட்கும்பொழுது வேலையின் அளவைக் குறைத்துக் கூறுவதுதான் உலக இயற்கை. வேலை இது என்று அறியு முன்னரே அதைப் பற்றி ஒரு மலைப்பு ஏற்பட்டுவிடுமானால் யாரும் வேலையை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். - . இறைவனிடம் தோழமை பூண்டு நண்பர் என்ற முறை யில் பழகுவதனால் இறைவனிடம்கூட இவ்வாறு பேசுகிறார் ஆரூரர். இதில் வியப்பு என்னவென்றால் இந்த நெல் மலையைத் தந்தவரிடமே போய்த் தம் திறமையைக் காட்டு கிறார். எவ்வாறு? குண்டையூரில் சில நெல்லுப் பெற்றாராம், எப்படி இருக்கிறது? மனிதர்களால் கொண்டு சேர்க்க முடியாதபடி மலையாகக் கிடக்கிற அவ்வளவு நெல்லைச் சில நெல்' என்று கூறுகிறார். அதுவும் யாரிடம் கூறுகிறார்? யார் இந்த நெல் டிலையைத் தந்தானோ அவனிடமே சென்று