பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. குன்காசம்பந்தன் 169 பங்குகொள்வார். அத்தகைய மனநிலையில் இப்போது ஊரார் நம் பரவையாருக்கு அவளுடைய கணவர் அளிந்த நெல் மலை இது என்று கூறினர். இவ்வாறு அவ்வூர் மக்கள் பேசிக்கொண்டிருக்கையில் யாரோ ஒருவர் ஒர் ஐயத்தைக் கிளப்பிவிட்டார் எவ்வளவு பெரிய மாளிகையில் வாழ்ந்தாலும் பரவையாருக்குக்கூட இவ்வளவு நெல்லையும் கொண்டு சேர்ப்பது இயலாத காரிய மாயிற்றே. என்ன செய்யப் போகிறார்? இந்த வினாவின் அடிப்படையில் ஒர் அளவு ஆசை இருப்பதையும் அறியலாம். போக்கும் இடம் அரிதாகும் என்று ஏன் கூறவேண்டும்? பிறருடைய நெல்லை அவர் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று கருதிவாளா இருந்துவிடாமல், என்ன செய்யப் போகிறார் என்று கேட்கையில் இந்த வினாவின் அடிப்படை வேறு இருக்குமோ என்று நினைக்கத் தோன்றியது. - இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டு வியப்பில் மூழ்கி இருக்கையிலேயே பரவையார் வீட்டில் அவரும் ஆராய்ச்சி யில் ஈடுபட்டார். தம்முடைய பயனுக்கு மேற்பட்ட ஒரு பொருள்ைச் சேமித்து வைத்தல் முறையன்று என்று கூறுவர். உலகத்தில் பொருள்கள் ஓர் அளவுடன்தான் கிடைக்கின்றன. மக்கள் தொகை அதிகமாகிவிட்ட காரணத்தால் அவர்கட்கு வேண்டும் பொருளையும் அதிகமாகத் தரவேண்டும் என்று இயற்கை நினைப்பதில்லை. எனவே, மக்கள் தொகைக்கு ஏற்ற அளவுப் பொருள்கள் கிடைக்காதபொழுது நாட்டில் பஞ்சம் ஏற்படுகிறது. வேறு எந்தப் பொருளுக்குப் பஞ்சம் ஏற்பட்டாலும், அதனால் பெருந்துன்பம் விளைந்துவிடப் போவதில்லை. ஆனால் மக்கட்குலத்தின் வாழ்க்கைக்கே இன்றியமையாததான உணவிற்குப் பஞ்சம் வந்துவிட்டால் அதனைவிடப் பெருந் தீங்கு வேறு இருத்தற்கில்லை. எனவே, அனைத்துப் பஞ்சங்களிலும் உணவுப் பஞ்சமே மிகவும் கொடியது. அத்தகைய பஞ்சநேரத்தில் ஒருவர் தமக்கு