பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 தேசிய இலக்கியம் இருக்கவேண்டிய அளவினும் மிகுதியாக உணவு வைத் திருப்பாராயின் அவர் செய்யும் குற்றம் மன்னிக்க முடியாத தொன்று. அடியார்கள் இயற்கையாகவே பிற உயிர்களி டத்துப் பெருங் கருணை கொண்டவர்கள். இத்தகைய பெருங் குற்றத்தைச் செய்வார்களா? உறுதியாகச் செய்ய மாட்டார்கள். இங்குப் பரவையாரும் இத்தகைய குற்றத்தைச் செய்துவிடாமல் ஊரவர்கட்கும் இந் நெல்லைப் பகிர்ந்து அளிக்க முடிவு செய்துவிட்டார். பரவையார் இவ்வாறு முடிவு செய்த நேரத்தில் திருவா ரூரின் நிலைமை எவ்வாறு இருந்தது? செல்வத் திருவாருர் என்று பலராலும் அழைக்கப்படுகிற அவ்வூரில் மக்களுடைய வாழ்க்கை வளத்துக்குக் குறை வில்லை. ஆனால், அவ்வூரை அடுத்துள்ள குண்டையூரில் பஞ்சம் வந்தபடியால் குண்டையூர்க் கிழவருக்கு நெல் கொடுக்க முடியாமற் போயிற்று என்று கண்டோம். அவ்வளவு பக்கத்தில் உள்ள ஊரில் மழை பெய்யாமையால் பஞ்சம் வந்துவிட்டது என்றால் அப் பஞ்சத்தின் கொடுமை திருவாரூரை மட்டும் தாக்காமல் விட்டுவிடுமா? அது பற்றிச் சேக்கிழார் ஒன்றும் கூறாவிட்டாலும், பரவையாருடைய சொற்களிலிருந்து திருவாரூரில் நெல் பஞ்சம் இருந்தது என நாம் அறியமுடிகிறது திருவாரூர் பெரிய நகரம் குண்டை யூர் சிறிய கிராமம். பஞ்சம் இரண்டு இடங்களையும் ஒருசேரத் தாக்கினாலும் நகரத்தை அதிகம் தாக்கமுடிவதில்லை; இது இன்றும் கானும் அனுபவம். நகரத்தவர்களிடத்தில் புசியைப் போக்கும் நெல் இருப்பதில்லையே தவிர, அதைப் பெறக் கூடிய பணம், கிராமத்தில் இருப்பவர்களிடம் இருப்ப தைக் காட்டிலும் மிகுதியாகவே இருக்கும், பஞ்சத்தின் தொடக்க காலங்களில் நகரத்தில் உள்ளவர் வருந்தவேண்டுவ தில்லை. ஏனெனில், அவர்களிடமுள்ள பணத்தின் உதவியால் எவ்வளவு விலை ஏறிவிட்டாலும் நகரத்தார் பொருள்களை வாங்கிக்கொள்ள முடியும். நாளாக நாளாகத்தான், பஞ்சத்தின் கொடுமை மிகுதிப்பட்ட நிலையில், எவ்வளவு பொருள்