பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 ം. இலக்கியும் உபகாரம் என்றேயாம் இல்வாழ்வான் என்பான் இயல் :புடைய மூவர்க்கும். நல்லாற்றின் நின்ற துணை என்றும், "பகுத்து உண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்த வற்றுள் எல்லாம் தலை என்றும் கூறுகையில் இல்லறத்தின் தலையாய கடன் பிறர்க்கு உபகாரப்படுதலே என்பதை நன்கு குறிப்பிடுகிறார். எனவே. ஆாரூரும் பரவையாரும் நடத்தும் இல்லறம் நன்கு நடைபெற வேண்டுமானால் பரவையார் அதனை நன்கு அறிந்து நடத்தவேண்டும். தமிழர் முறைப்படி பொரு ைள ச் சம்பாதித்துக் கொணர்ந்து தரவேண்டியது கணவன் கடமை. அதனை வகையறிந்து பிறர்க்கும் ஈந்து, தானும் வைத்து வாழ்க்கை நடத்த வேண்டியது மனைவியின் கடமை. பெரும்பான்மை மனைவி பின் கடமையில் தலைவன் தலையிடுவதில்லை. சிற் சில சந்தர்ப்பங்களில் தலைவன் தலையிட்டு மனைவியின் கடமையை நினைவூட்டுதலும் உண்டு. பெருஞ்சித்திரன்’ என்ற சங்ககாலப் புலவன் குமணனிடம் தான் பெற்றுவந்த பரிசிலை மனைவியிடம் தந்துவிட்டு ஏ. பெண்ணே, நீண்ட நாளாக வறுமையில் வாடிய காரணத்தால் இப் பொருளைப் பிறர் அறியாமல் மறைத்துக்கொண்டு வாழவேண்டும் என்று நினையாதே. உன்னை விரும்புபவர்க்கும் நீ விரும்புபவர்க்கும் வேண்டுமென்ற அளவு வரையாமல் வழங்குவாயாக’ என்று கூறுகிறான். "கின்ாயர்து உறைார்க்கும் நீக பந்து உறைார்க்கும் பன்மாண் கற்பின்கின் கிளைமுதலோர்க்கும் இன்னோர்க்கு என்னாது என்னோடும் குழாது வல்லாங்கு வாழ்தும் என்னாது யுேம். எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே’ - (புறம், 163) அந்தத் தமிழ்ப் பரம்பரையில் வந்த பரவையார் கணவனுடைய கருத்தை அறியாமற்கூடப் பறை அறை வித்துவிட்டார். தாம் செய்யும் இந்த தற்காரியத்துக்குக்