பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் - 175 உயரமாக வைத்துக்கொண்டு உறங்கிவிட்டார். சாதாரண வசதியில் வாழ்பவர்கள் கூட இன்று தலைக்குத் தலையணை இல்லாமல் உறங்க மறுத்துவிடுகிறார்கள். வேறு எது இல்லாமல் வேண்டுமானாலும் இருந்துவிடுவேன்; ஆனால், தலையணை இல்லாமல் மட்டும் உறங்க முடியாது என்று கூறு பவர்களை நாம் காண்கிறோம். நலையணை என்று பெயர் வந்ததே தலைக்கு அது அணையாக இருக்கிறது என்பதனால் தான். அதன் பெயர்க் காரணத்தைக்கூட மறந்துவிட்டுக் கால் அணையாகவும், கையணையாகவும் பயன்படுத்துகிற பெரியோர்களும் உண்டு. இத்தகையோர் அனைவரும் நம்பியாருரருடைய செயலில் அறிய வேண்டியது ஒன்று உண்டு. உறக்கம் வந்தபொழுது அரசச் செல்வத்தில் வளர்ந்த அவர் சற்றும் யோசனை செய்யாமல் செங்கற்களைத் தலைக்கு வைத்துக்கொண்டு உறங்கியும் விட்டார். பக்கத் திலுள்ள மடத்திற்குச் சென்றிருந்தால் நல்ல. படுக்கை கிடைத்திருக்குமே. ஆனால், அடியார்கள் வாழ்க்கையில் அரச இன்பமும் ஆண்டி வாழ்க்கையின் இன்பமும் ஒன்று தான்.ஒன்றை அவர்கள் விரும்புவதும் இல்லை மற்றொன்றை அவர்கள் வெறுப்பதும் இல்லை. இதுவே அவர்களுடைய வாழ்க்கையின் உட்பொருளும் மறைபொருளும் ஆம். நம்பியாரூரர் உறங்கியவுடன் உடன் வந்த அடியார்களும் உறங்கிவிட்டனர் சற்று நேரம் கழித்தவுடன் அனைவரும் விழித்துகொண்டனர். ஆரூரரும் விழித்துக்கொண்டார். என்ன அதிசயம்? அவருடைய தலைக்கு வைத்திருந்த செங்கற்கள் அனைத்தும் பொன்கற்களாக மாறி இருந்தன. 'சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணைமலர்க்கண். பற்றும் துயில்கிங் கிடப்பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார்